போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
ஜியோ பயனர்களுக்கு ஒரு சூப்பர் அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினமும் 3GB டேட்டா கிடைக்கும் நன்மையோடு வெறும் ரூ.200 விலை புள்ளியில் ரீசார்ஜ் செய்ய இப்போது கிடைக்கிறது. இந்த திட்டத்தின் அசல் விலை, இதன் நன்மைகள் என்ன? என்பது இங்கே.
ஜியோ (Jio) நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல விதமான செல்லுபடியாகும் காலங்களுடன், பல விலை பிரிவில் பல்வகையான நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. உதாரணமாக, ஜியோ 28 நாள் வேலிடிட்டி, 30 நாள் வேலிடிட்டி, 56 நாள் வேலிடிட்டி, 84 நாள் வேலிடிட்டி, 90 நாள் வேலிடிட்டி, மற்றும் 365 நாள் வேலிடிட்டியுடன் திட்டங்களை வழங்குகிறது.

ஜியோவின் எந்த திட்டம் 14 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது?
இத்தனை வேலிடிட்டி நன்மைகளை பற்றி தெரிந்த ஜியோ பயனர்களுக்கு, நிறுவனம் 14 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை அதிக நன்மையுடன் வழங்கி வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு ரூ. 219 விலையில் 14 நாள் வேலிடிட்டி உடன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.
இந்த ரூ.219 திட்டம் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா வழங்கும் திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முழுக்க தினமும் 3GB டேட்டா கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கிறது.
IPL ரசிகர்களை குஷியடைய செய்யும் விதத்தில், ஜியோ இப்போது இந்த திட்டத்துடன் இலவசமாக எக்ஸ்ட்ரா டேட்டாவையும் வழங்கி வருகிறது. ஆம், இந்த திட்டத்துடன் கிடைக்கும் தினசரி 3GB டேட்டா நன்மை போக, இந்த திட்டத்துடன் இலவசமாக 2GB டேட்டா எக்ஸ்ட்ரா நன்மையாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டாவின் மதிப்பு 44GB ஆக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio ரூ.219 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அன்லிமிடெட் நன்மைகள்:
இது தவிர, இந்த ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை கிடைக்கிறது. இத்துடன் தினமும் இந்த திட்டம் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டதாக கருதாதீர்கள். ஜியோ இந்த திட்டத்துடன் இன்னும் கூடுதலாக இலவச நன்மையையும் வழங்குகிறது.
ரூ. 219 திட்டத்துடன் கிடைக்கும் இலவச நன்மையாக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) போன்ற சேவைகள் ஜியா பயனர்களுக்கு கிடைக்கின்றன. இத்துடன் இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் முடிவந்துவிட்டது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு மக்களே. ஜியோ இன்னும் கூடுதலாக ஒரு இலவச அன்லிமிடெட் நன்மையை வழங்குகிறது.
ஜியோ கஸ்டமராக இருந்து, 5G மொபைல் சாதனத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் இலவசமாகவும், அன்லிமிடெட்டாகவும் 5ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. IPL ரசிகர்ளை சந்தோஷத்தில் போடு தாக்கும் விதமாக இந்த திட்டம் பல நன்மைகளை அடுக்கிக்கொண்டே செல்லகிறது. உண்மையில், அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறும் IPL 2024 மேட்ச்களை பார்க்க இந்த திட்டம் பெஸ்டான திட்டமாக பார்க்கப்டுகிறது.


Click it and Unblock the Notifications








