Jio மரண மாஸ்.. ரூ.200 விலை தினமும் 3GB டேட்டா.. இலவசமாக 2GB டேட்டா.. அன்லிமிடெட்டாக 5G டேட்டா.. எந்த திட்டம்?
இந்தியாவில் சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம் எது? மக்களின் மனதை குளிர வைத்த பெஸ்ட் டெலிகாம் நிறுவனம் எது? என்ற இரண்டு கேள்விக்கும் ஜியோ (Jio) என்ற ஒற்றை வார்த்தை தான் விடையாக இருக்கிறது. இது தான் உண்மையும் கூட.
இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மைகளை வாரி வழங்கி, மக்கள் நெஞ்சில் தனக்கென்ற ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளது ஜியோ நிறுவனம். ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு மரண மாஸ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ரூ. 200 விலை புள்ளியில் வருகிறது. மிகவும் மலிவான விலையில் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ஒரே திட்டம் இதுவாகும்.

Jio மரண மாஸ்.. மிகவும் குறைந்த விலையில் தினமும் 3ஜிபி டேட்டாவா?
எது? வெறும் 200 ரூபாய் விலை புள்ளியில் தினமும் 3ஜிபி டேட்டாவா? என்று உங்களில் சிலர் ஆச்சரியமாக பார்த்தாலும், உண்மை அது தான். இத்துடன், இந்த திட்டத்தில் உங்களுக்கு ஜியோ நிறுவனம் இலவசமாக 2GB டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்துடன் (Jio Prepaid Plans) இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் ஜியோ ரூ. 219 பிளான் (Jio Rs 219 Plan) என்ற விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் உங்களுக்கு டேட்டா (data) நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை, எஸ்எம்எஸ் (SMS) நன்மை, இலவச ஜியோ (free jio benefits) நன்மை மற்றும் அன்லிமிடெட் ட்ரூலி 5ஜி டேட்டா (unlimited truly 5G data) நன்மை போன்றவற்றை வழங்குகிறது.

வெறும் 219 ரூபாய்க்கு இவ்வளவு நன்மைகளா? தூள் கிளப்புதே.!
நாம் முன்பே சொன்னது போல, ஜியோ வழங்கும் இந்த மரண மாஸ் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) போன்ற நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் 14 நாட்களாகும். , அதாவது இதன் வேலிடிட்டி மொத்தம் 14 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் இந்த மேற்குறிய நன்மைகள் தவிர, ஜியோ இப்போது இதனுடன் இலவசமாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் ஜியோ வழங்கும் கூடுதல் இலவச நன்மைகளாக வழக்கம் போல, ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) போன்ற சேவைகள் பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த திட்டத்துடன் ஜியோவின் இலவச 5ஜி டேட்டா நன்மையையும் இப்போது கிடைக்கிறது.
ஆம் மக்களே, நீங்கள் ஜியோ கஸ்டமராக இருந்து, உங்கள் கையில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் (5G ஸ்மார்ட்போன்) அல்லது 5ஜி மொபைல் (5G Mobile) இருக்கிறது என்றால், இந்த இலவச நன்மையையும் நீங்கள் 14 நாட்களுக்கு அனுபவிக்கலாம். நீங்கள் ஜியோவின் 5ஜி வட்டத்திற்குள் இருந்தால், உங்களுக்கு ஜியோவின் அன்லிமிடெட் ட்ரூலி 5ஜி டேட்டா நன்மையையும் கிடைக்கிறது. இத்தனை நன்மைகளையும் ஒன்றாக வழங்கி, ரூ.219-திட்டம் ஒரு மரண மாஸ் திட்டமாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








