என்னா மனுஷன்யா? ரூ.200 விலையில் தினமும் 3GB டேட்டாவா? வாரிவழங்கும் அம்பானி மனசு.. எந்த Jio திட்டம் என்ன நன்மை?
முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ (Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல ட்ரீட்களை வழங்கி வருகிறது. இதோ வீக்கென்ட் வந்துவிட்டது, எல்லோருக்கும் குறைந்தது தினசரி 3GB டேட்டாவாவது தேவைப்படும் நேரமும் வந்துவிட்டது.
அடுத்த 3 நாட்களுக்கு வழக்கமான ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் 1GB டேட்டா, 1.5GB டேட்டா மற்றும் 2GB டேட்டா நன்மைகள் எல்லாம் பற்றவேப்பற்றாது. காரணம், வார இறுதியில், மக்கள் பொழுதுபோக்கிற்காக இன்டர்நெட் சேவையை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பயன்படுத்தும் நேரம் இது. இத்தகைய சூழ்நிலையில் இருந்து தப்பிக்க விரும்பும் ஹெவி டேட்டா யூஸர்களுக்காகவே ஜியோ நிறுவனம் தனது கைவசம் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வைத்துள்ளது.

ஜியோ ரூ. 219 திட்டம் (Jio Rs 219 Plan):
இந்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Prepaid Recharge Plan) தினசரி 3GB டேட்டா நன்மையை வெறும் 200 ரூபாய் விலை புள்ளியில் வழங்கி (Jio plan under rs 200) அசத்துகிறது. ஜியோ வழங்கும் இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டத்தின் நன்மை என்ன? இதன் வேலிடிட்டி விபரம் என்ன? என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டம் ரூ.219 என்ற விலையுடன் வருகிறது.
ஜியோ ரூ. 219 திட்டம் (Jio Rs 219 Plan) உங்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா (3GB data benefits) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மையையும் வழங்குகிறது. இந்த குறைந்த விலை திட்டம் உங்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. வாரி வழங்குவதில் அம்பானி மனசு தாராள மனசு என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இருப்பினும், ஓவர் தாராளத்தை நம்மால் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இந்த திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) உடன் வருகிறது. ஆம், இந்த திட்டம் முழு மாதம் செல்லுபடியாகும் வழக்கமான 28 நாள் வேலிடிட்டி உடன் வருவதில்லை. அதற்கு பதிலாக இது அரை மாதம் செல்லுபடியாகும் 14 நாள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 44GB டேட்டா (44GB data) உங்களுக்கு கிடைக்கிறது.

என்னா மனுஷன்யா? ரூ.200 விலையில் தினமும் 3GB டேட்டாவா?
இத்துடன் இந்த திட்டம் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited Ture 5G Data) நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு ஜியோவின் பல இலவச சேவைகளையும் வழங்குகிறது. இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற இலவச சேவைகளுக்கான சந்தாவை வழங்குகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜியோசினிமா திட்டம் பிரீமியம் (JioCinema Premium) சந்தாவுடன் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ வலைத்தள பக்கத்தின் தகவல் படி, இந்த திட்டம் ரூ. 25 மதிப்பிலான எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபர் (Extra data offer worth Rs 25) நன்மையை வழங்குகிறது. குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு அட்டகாசமான திட்டமாகும். இந்த திட்டம் உங்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டாவை வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையுடன் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








