ஏர்டெல்.. விஐ-க்கு செக் மேட் வைத்த ஜியோ.. ரூ.209 விலையில் அன்லிமிடெட் நன்மை.. இதை அடுச்சுக்க ஆளே இல்லை..
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால், நிறுவனம் தற்போது சைலெண்டாக மிகவும் மலிவு விலையில் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.209 மட்டுமே. இந்த திட்டத்தின் விபரங்களை பார்க்கலாம்.
ஒரு மாதம் முழுக்க நிலையான டேட்டா பயனுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice call) நன்மையுடன் வருகிறது. இந்த நன்மைகளுடன் குறைந்த விலையில் ஒரு சிறந்த திட்டம் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் வேண்டாம் என்றா சொல்வீர்கள். இல்லை தானே.. மலிவு விலையில் ஜியோ (Jio) நிறுவனம் வழங்கும் இந்த அட்டகாச நன்மைகளை பற்றி பார்க்கலாமா?

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.209 திட்டம் (Reliance Jio Rs 209 Prepaid Plan) 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. ஜியோவின் இந்த மலிவு விலை திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 28 ஜிபி டேட்டாவைப் (28GB Data) பெறுகிறார்கள். இந்த டேட்டா 4ஜி வேகத்துடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் பெறுவார்கள்.
இதனுடன், வரம்பற்ற அழைப்புகளின் நன்மையும் (Unlimited calls) திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம், வழங்கும் மிகவும் மலிவான விலை கொண்ட திட்டமாக இந்த ரூ. 209 திட்டம் பார்க்கப்படுகிறது. பல பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகவும் இந்த திட்டம் செயல்படுகிறது.
ஜியோ ப்ரீபெய்டு பயனர்களை தங்களின் சிம் கார்டை (Sim Card) குறைந்த விலையில் ஆக்டிவேட் நிலையில் வைத்திருக்க இந்த திட்டம் உதவுவதோடு, ஒரு மாதத்திற்கு உங்களுக்கு தேவையான டேட்டா நன்மை, SMS நன்மை மற்றும் வாய்ஸ் கால்ஸ் நன்மையோடு, கூடுதல் இலவச நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.209 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஜியோவின் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 28 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள் என்பதே சிறப்பான விஷயமாகும். இத்தகைய விலையில் வேறு எந்த நெட்வொர்க்கும் இப்படி ஒரு வேலிடிட்டி மற்றும் டேட்டாவை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மற்ற மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் இந்த விலையில் வெறும் ஒட்டுமொத்த SMS நன்மைகளை வழங்குகிறது. ஆனால், ஜியோ நிறுவனம் தினமும் செல்லுபடியாகும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை தொடர்ந்து 28 நாளுக்கு வழங்குகிறது. ஆக மொத்தம் இந்த திட்டம் உங்களுக்கு இதன் வேலிடிட்டி முடியும் வரை 2800 SMS களை வழங்குகிறது.
இதனுடன், வரம்பற்ற அழைப்புகளின் நன்மையும் திட்டத்தில் கிடைக்கும். ஜியோ பயனர்கள் ஜியோ பயன்பாடுகளின் பாராட்டு சந்தாவையும் பெறுவார்கள். ஜியோவின் ரூ.209 திட்டமானது JioTv, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.209 திட்டமானது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன், எந்த நெட்வொர்க்கிற்கு வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளும் வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கானது.
குறைந்த பணத்திற்கான மதிப்பு மிகு திட்டமாகும். நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. மற்ற நிறுவனங்களும் தங்கள் பழைய ரீசார்ஜில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருகின்றன.
இந்த வரிசையில், ஜியோ நிறுவனமும் இப்போது பல புதிய திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அதேபோல், அதன் பழைய திட்டங்களில் பல புதிய மாற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு இந்த ரூ.209 திட்டம் ஒரு சிறந்த திட்டமாகும். மலிவு விலையில் நல்ல நன்மைகளை தேடுபவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.


Click it and Unblock the Notifications








