Home
News

வெச்சாரு அம்பானி.. ரூ.209-க்கு முடிச்சிட்டாரு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 22 ஜிபி டேட்டா.. அடிமட்ட விலையில!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 22 ஜிபி டேட்டா (Data) மற்றும் 100 எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளுடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆப்களின் சலுகையும் கொடுக்கிறது. 1 ஜிபி டேட்டாவுடன் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ஜியோ திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 209 திட்ட விவரங்கள் (Jio Rs 209 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 1 ஜிபி டேட்டா திட்டங்களின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். மொத்தமாக 22 ஜிபி டேட்டா மற்றும் 1 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) பயன்படுத்தி கொள்ளலாம்.

வெச்சாரு அம்பானி.. ரூ.209-க்கு முடிச்சிட்டாரு.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். அதேபோல நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்களால் செய்து கொள்ளலாம். மேலும், ஜியோ ஆப்ஸ் (Jio Apps) சந்தா கிடைக்கிறது.

இதன் மூலம் ஜியோசினிமா (Jio Cinema), ஜியோடிவி (Jio TV) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். ஜியோவின் கட்டண உயர்வுக்கு பிறகு 1 ஜிபி டேட்டா திட்டத்தில் மிகவும் மலிவான விலைக்கு இந்த திட்டம் மட்டுமே கிடைக்கிறது. இதற்கு அடுத்த திட்டமாக ஜியோ ரூ 249 திட்டம் இருக்கிறது. இதன் சலுகைகள் எப்படி?

ஜியோ ரூ 249 திட்ட விவரங்கள் (Jio Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழக்கமாக கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, மாதம் முழுவதும் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 1 ஜிபி டேட்டாவை நாள்தோறும் பெற்று கொள்ளலாம்.

28 நாட்கள் வீதம் 28 ஜிபி டேட்டா மற்றும் முந்தைய திட்டத்தை போலவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு செய்து கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆப்களை பெற்று கொள்ளலாம்.

இதைவிட ரூ.10 விலை குறைவாக மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா தினசரிக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், வேலிடிட்டி கம்மியாக கிடைக்கிறது. இருப்பினும், 33 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடிகிறது. ரூ.250 பட்ஜெட்டுக்குள் அதிக டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

ஜியோ ரூ 239 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 22 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இருப்பினும், 1.5 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் 1.5 ஜிபி தினசரி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையை பெறலாம். 100 எஸ்எம்எஸ் சலுகையையும் தினசரிக்கு பெற்று கொள்ள முடியும். வழக்கமாக கிடைக்கும், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களை பயன்படுத்த முடியும். இந்த மூன்று திட்டங்களையும் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 209 Plan With Unlimited Voice Calls 22GB Data 22 Days Validity Check Cheapest 1GB Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X