அம்பானி செய்கை.. ரூ.209-க்கு இறக்கிய புது திட்டம்.. அன்லிமிடெட் கால்கள்.. 1 ஜிபி டேட்டா.. வேலிடிட்டி சூப்பர்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கட்டண உயர்வுக்கு பிறகு படாதபாடு பட்டுவருகிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலான கஸ்டமர்களை கொண்டிருக்கும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தியதால், வழக்கம்போல ஜியோ நிறுவனமே அடிமட்ட விலைக்கு திட்டங்களை பேக் செய்து தப்பித்துள்ளது. இப்போது, ரூ.209 விலையிலான திட்டத்தில் ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) குறித்த விவரங்கள் இதோ.
ஜியோ ரூ 209 திட்ட விவரங்கள் (Jio Rs 209 Plan Details): ஜியோவில் தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) சலுகைகளுடன் அடிமட்ட விலைக்கு இந்த திட்டம் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, 1 ஜிபி டேட்டாவை தினசரிக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஜியோவில் வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. 1 ஜிபிக்கு பிறகும் குறைவான வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். ஆகவே, 22 ஜிபி அதிகபட்சமாக கிடைக்கிறது. அதேபோல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடிகிறது. இதுபோக வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
அதாவது, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். இதுபோக ஜியோ ஆப்ஸ் (Jio Apps) வருகின்றன. ஆகவே, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 22 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம்.
இதேபோல 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் 28 நாட்களுக்கு ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ரூ 249 விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல், மற்ற சலுகைகளும் குறைவில்லாமல் கிடைக்கின்றன. 1 ஜிபி டேட்டா திட்டத்தில் பெரும்பாலான கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும் திட்டம் இது மட்டுமேயாகும்.
ஜியோ ரூ 249 திட்ட விவரங்கள் (Jio Rs 249 Plan Details): முன்பே சொன்னதுபோல இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு (Jio Prepaid Plan) 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தினமும் 1 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.
மேலும், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களின் சலுகை கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டா வேண்டாம், வாய்ஸ் கால்கள் மட்டும் போதும் என்றால் பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.
ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த ஜியோ திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இதை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். 2 ஜிபி முன்னதாகவே முடிந்துவிட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் 28 நாட்கள் முழுவதும் கிடைக்கிறது. மேலும், 300 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கொடுக்கப்படுகின்றன. முந்தைய ப்ரீபெய்ட் திட்டங்களை போலவே ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகை பயன்படுத்த முடியும். இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








