Home
News

இப்படி ஒன்னு இருக்குனு பலருக்கு தெரியாது.. 22 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. தினமும் 1 ஜிபி டேட்டா வரும்!

ஜியோ (Jio) நிறுவனத்தின் ஜியோ ஆப்பில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு மலிவு விலை ப்ரீபெய்டு திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டம் இருப்பது பல கஸ்டமர்களுக்கு தெரியாது. ஏனென்றால், சலுகைகள் அவ்வளவு மலிவான விலையில் கிடைப்பதால் ஜியோ வெப்சைட்டில் கூட இந்த திட்டம் தோன்றாமல் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ வேல்யூ திட்டங்கள் (Value Plans) மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஆரம்ப விலை திட்டமாக ரூ.189 ரீசார்ஜ் இருக்கிறது. ஆனால் இதில் 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால், இப்போது பார்க்க போகும் திட்டம் தினசரிக்கு 1 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. அதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் வைத்துள்ளது.

இப்படி ஒன்னு இருக்குனு பலருக்கு தெரியாது.. 22 நாட்களுக்கு வாய்ஸ் கால்!

ஜியோ ரூ.209 திட்ட விவரங்கள் (Jio Rs 209 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா (Daily 1GB Data) கிடைக்கிறது. சொல்லப்போனால், 1 ஜிபி டேட்டாவை தினசரிக்கு கொடுக்கும் ஒரேவொரு திட்டமாக இது இருக்கிறது. இந்த 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது. 22 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இது இருக்கிறது.

ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 22 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோன்ற மலிவு விலை திட்டத்தில் தினசரி எஸ்எம்எஸ் கிடைக்காது. ஆனால், இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை இந்த திட்டம் கொடுக்கிறது.

இந்த சலுகை மூலமாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாகவும் வழக்கமாகவும் கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டமும் கொடுத்து இருக்கிறது.

இந்த திட்டத்தை ஜியோ வெப்சைட் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாது. மைஜியோ ஆப் (MiJio) ஆப் மூலமாக மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். அதேபோல வேல்யூ திட்டங்களின் கீழ் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தோடு ஜியோ ரூ.189 ப்ரீபெய்ட் திட்டமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஜியோ வெப்சைட்டில் இந்த திட்டம் காண்பிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். ஆனால், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படாது. அதாவது, இந்த திட்டத்துக்கு முந்தைய திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். அதில் 22 நாட்கள் கிடைக்கிறது என்றால், இதில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.

இது 28 நாட்களுக்கும் பொருந்தும். இதை பயன்படுத்திவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா மட்டுமே கிடைக்கும். அதேபோல மொத்தமாகவே இதில் 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால், முந்தைய திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டது. ஆகவே, வேலிடிட்டி மட்டுமே முந்தைய திட்டத்தில் குறைவாக இருக்கிறது.

மற்றபடி டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளில் முந்துகிறது. இந்த திட்டங்கள் டேட்டாவுடன் கிடைக்கும் வேல்யூ திட்டங்களாக இருக்கின்றன. இதே வேல்யூ திட்டங்களில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களும் இருக்கின்றன. ஆனால், அது ஆரம்ப விலையே ரூ.448ஆக இருக்கிறது. இதில் 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கும்.

ஆனால், 1000 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். இதைத் தவிர மற்ற சலுகைகள் கிடைக்காது. அதேபோல டேட்டா சலுகை துளியும் கிடையாது. வெறும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். இதில் உங்களது விலைக்கு ஏற்ப இருக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 209 Plan With 22 Days Validity Unlimited Voices Calls Check 1GB Daily Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X