Home
News

ரூ.209-க்கு முடிச்ச அம்பானி.. இனிமே ரீசார்ஜ் இதுதான்.. குஷியில் Jio யூசர்கள்.. வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா!

வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே அடங்கிய ப்ரீபெய்ட் திட்டங்களின் வருகைக்கு பிறகு எந்த திட்டங்கள் எப்போது நீக்கப்படும் என்று தெரியாத அளவுக்கு வேல்யூ திட்டங்கள் நீக்கப்பட்டன. பிறகு கஸ்டமர்கள் கடுப்பானதால் ஒரு திட்டம் மீண்டும் சேர்க்கப்பட்டது. இதில் அப்பாடா என்று சொல்லும்படி 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் பழையபடியே கிடைக்கின்றன. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுடன் வெறும் ரூ.209 விலைக்கு தொடங்குகின்றன. ரூ.249 விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

வாய்ஸ் கால்கள் மட்டுமே கிடைக்கும் திட்டங்களுக்கு பிறகும் இந்த திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏனென்றால், தினசரி டேட்டாவுடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் திட்டங்களாக இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு திட்டமும் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகையை கொடுக்கிறது.

ரூ.209-க்கு முடிச்ச அம்பானி.. இனிமே ரீசார்ஜ் இதுதான்.. குஷியில் Jio!

ஜியோ ரூ 209 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 209 Prepaid Plan): ஜியோ கஸ்டமர்களுக்கு 1 ஜிபி டேட்டாவுடன் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா (1GB Data) மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு 22 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 22 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடிகிறது. இந்த டேட்டா சலுகை போக 22 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடிகிறது. இதுபோக சலுகைகள் இருக்கின்றன.

அதாவது, வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவுக்கு அடுத்து 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு செய்து கொள்ள கிடைக்கிறது. மேலும், ஜியோ ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கொடுக்கப்படுகிற ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்கள் பயன்படுத்த கிடைக்கிறது.

ஜியோ ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 249 Prepaid Plan): 1 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடிகிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் பொருந்துகிறது. வாய்ஸ் கால்களும் அதேபோல கிடைக்கிறது.

ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையை பெற்று கொள்ள முடிகிறது. இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் பயன்படுத்த கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகள் கிடைக்கின்றன. இரண்டு திட்டங்களிலும் ஜியோ சினிமா பிரீமியமாக கிடைக்காது.

இதைவிட மலிவான விலைக்கு திட்டம் வேண்டுமானால், வேல்யூ திட்டத்தில் நீக்கப்பட்டு அதன் பிறகு சேர்க்கப்பட்ட ரூ 189 திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ ஆப்களின் சலுகையும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 209 Plan With 22 Days Validity Rs 249 Plan With 28 Days Validity Offer Voice Calls Daily Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X