Home
News

மக்களே Jio-வுக்கே திரும்ப வாங்க.. விலை குறைப்பு.. புதிய திட்டங்கள் அறிவிப்பு.. அடிமட்டத்திற்கு இறங்கிய Jio..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் சமீபத்தில் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை சகட்டுமேனியாக உயர்த்தியது. இதன் விளைவாக ஜியோ நெட்வொர்க்கை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் கூட, விலை ஏற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல், அரசு நடத்தும் பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க்கிற்கு மாறிவிட்டனர். ஏறக்குறைய 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் 28 நாட்களில் பெற்றுள்ளது. இதனால், ஜியோவுக்கு பெரிய அடி விழுந்துள்ளது. தனது நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு செல்லும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ தற்போது மிகவும் மலிவு விலை திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ நிறுவனம் கடந்த மூன்று வாரங்களில் 3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை நாள், அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வந்த ஜியோ நிறுவனம், இப்போது அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவு, நிறுவனத்தின் திடீர் விலை ஏற்றத்தை தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களே Jio-வுக்கே திரும்ப வாங்க.. விலை குறைப்பு.. புதிய திட்டங்கள்..

மக்களே Jio-வுக்கே திரும்ப வாங்க.. விலை குறைச்சுட்டோம்.. அடிமட்டத்திற்கு இறங்கிய Jio:

இந்த சரிவை சரி செய்யும் விதமாக ஜியோ பல புதிய ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. இருப்பினும், மக்கள் மனம் மாறுவதாக தெரியவில்லை. காரணம், ஜியோவின் தினசரி டேட்டா நண்மையுடன் கூடிய அடிப்படை திட்டம் ரூ.300 விலைக்கு மேல் ஆரம்பமாகிறது. இது வாடிக்கையாளர்களை கவரும் என்று ஜியோ நினைத்தது ஆனால், மக்கள் இதற்கெல்லாம் நாங்கள் மீண்டும் ஜியோவுக்கு மாறப்போவதில்லை என்று தெளிவாகிவிட்டனர்.

இப்போது, தன்வசமிருந்து விலகி செல்லும் ஜியோ வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக, ஜியோ நிறுவனம் ரூ.200 விலை புள்ளியில், தினசரி டேட்டா நன்மைகளை வழக்கும் மிகவும் குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் உங்களுக்கு தினமும் 1GB டேட்டா நன்மையை வழங்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்த திட்டத்துடன் மற்றொரு திட்டத்தையும் ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ ரூ. 209 பிளான் (Jio Rs 209 Plan):

இந்த திட்டம் ஜியோ ரூ. 209 பிளான் என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தினசரி 1GB டேட்டா நன்மையுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் வெறும் 22 நாட்கள் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. இத்துடன் JioCinema, JioTv, JioCloud போன்ற இலவச சேவைகளும் கிடைக்கிறது.

ஜியோவின் முதல் 22 நாள் வேலிடிட்டி திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் இதற்கு முன்பு 28 நாள் வேலிடிட்டி முதல் துவங்கி 365 நாள் வேலிடிட்டி வரை நீடிக்கும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்தது. இப்போது நடைபெறும் சரிவை சரி செய்யும் விதமாக, வேறு வழியே இல்லாமல், தனது பயனர்களை தக்க வைத்துக்கொள்ள ஜியோ நிறுவனம் 22 நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ ரூ. 249 திட்டம் (Jio Rs 249 Plan):

இதே விலைக்கு நெருக்கமாக, ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ ரூ. 249 திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டம் தினசரி 1GB டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இதிலும், JioCinema, JioTv, JioCloud போன்ற இலவச நன்மைகள் அணுக கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 209 Plan Launched With 1GB Daily Data 100 SMS and Unlimited Voice Calls For 22 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X