ஏழைக்கு ஏற்ற Jio திட்டம்.. டேட்டா, வாய்ஸ், SMS உடன் ரூ. 200 விலை.. இது இருக்க Jio வாய்ஸ் ஒன்லி திட்டம் எதற்கு?
ஜியோ (Jio) நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக பல ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Jio prepaid recharge plan) வழங்கி வருகிறது. இதில் அணைத்து விதமான மக்களும் பயன்பெறும் வகையில், வெறும் ரூ. 200 விலை வரம்பில் ஜியோ நிறுவனம் ஒரு டீசெண்டான ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio plan under Rs 200 range) வழங்கி வருகிறது. மாத இறுதியில் அதிக செலவில்லாமல் ஒரு சாமர்த்தியமான ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்ய விரும்புவோருக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமையும். இது எந்த திட்டம்?
இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதில் எவ்வளவு டேட்டா நன்மை வழங்கப்பட்டுள்ளது. அன்லிமிடெட் கால்ஸ் சேவை இருக்கிறதா? தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்-கள் பயன்படுத்த கிடைக்குமா? இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் எத்தனை நாட்கள்? என்பது போன்ற விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். உங்களிடம் ஜியோ சிம் கார்டு இருக்கிறதென்றால், இந்த திட்டத்தை தெரிந்துகொள்வது சிறப்பானது.

ஏழைக்கு ஏற்ற Jio திட்டம்.. டேட்டா, வாய்ஸ், SMS உடன் ரூ. 200 விலை:
ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் ஆபரேட்டர் வழங்கும் பல வகையான திட்டங்களில் மலிவு விலை விருப்பமாக பயன்படுத்த கிடைக்கும் ஒரு சிறந்த திட்டம் தான் இந்த ஜியோ ரூ. 209 திட்டம் (Jio Rs 209 Plan). இந்த திட்டம் வெறும் 209 ரூபாய் செலவில் 22 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதுவொரு மலிவு விலை விருப்பம் என்பதனால், வழக்கமான 28 நாள் அடிப்படை வேலிடிட்டிக்கு பதிலாக ஜியோ 22 நாள் செல்லுபடியை வழங்கியுள்ளது.
இந்த ஜியோ 209 பிளான் (Jio 209 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இத்திட்டம் தினசரி 1GB டேட்டா (1GB data) நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 SMS நன்மையையும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். இந்த திட்டம் 22 நாட்களுக்கு செல்லுபடியாகும் மொத்த வேலிடிட்டி (Jio 22 days validity plan) காலத்தில் 22GB மொத்த டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ ரூ. 209 திட்டம் மற்றும் ஜியோ 249 பிளான் (Jio Rs 209 Plan and Jio 249 Plan):
ஒருவேளை 22 நாட்கள் வேலிடிட்டி உங்களுக்கு போதாது என்றால், ஜியோ 200 ரூபாய் விலை ரேஞ்சில் வழங்கும் மற்றொரு திட்டமான ஜியோ ரூ. 249 திட்டத்தை (Jio Rs 249 Plan) நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ஜியோ 249 பிளான் (Jio 249 Plan) திட்டம் முந்தைய திட்டம் போல் இல்லாமல், இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வழக்கமான வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது.
ஜியோ 209 திட்டத்தை காட்டிலும் இதில் 6 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி நன்மை கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் அப்படியே 209 ரூபாய் திட்டத்தில் கிடைத்தவை போல ஒத்து இருக்கின்றது. இந்த ஜியோ 249 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி 1GB டேட்டா நன்மை மற்றும் தினசரி 100 SMS நன்மை போன்றவற்றை 28 நாட்களுக்கு (Jio 28 days validity plan) வழங்குகிறது.
ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) இலவச நன்மை:
இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 28GB டேட்டா நன்மை (total 28GB data) கிடைக்கிறது. ஜியோவின் ரூ. 209 திட்டம் மற்றும் ரூ. 249 திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற ஜியோ ஆப்ஸ் இலவச நன்மைகளையும் சேர்த்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஜியோ வெளியிட்ட வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் ரூ. 400 முதல் துவங்கின. இப்படி இருக்கையில், 200 ரூபாய்க்கு டேட்டா, வாய்ஸ், SMS எல்லாம் தரும் இந்த திட்டத்தை ஏன் மிஸ் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








