Home
News

ஒரே Jio ரீசார்ஜ்.. அடுத்த 200 நாட்கள்.. வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா.. குஷியில் கஸ்டமர்கள்!

ஜியோ (Jio) நிறுவனத்தில் 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையில் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் இருக்கின்றன. இதில் அதிக வேலிடிட்டி என்றால், 90 நாட்கள் அல்லது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களையே கஸ்டமர்கள் தேர்வு செய்வார்கள். இவர்களுக்கு 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். ஏனென்றால், டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், ஓடிடி உள்ளிட்ட மொத்த சலுகைகளும் கிடைக்கின்றன.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு ரூ.2025 விலைக்கு இந்த புதிய திட்டம் களமிறக்கப்பட்டது. ஆரம்பத்தில் லிமிடெட் ப்ரீயட் ஆஃபராக மட்டுமே கிடைத்தது. ஆனால், இப்போது, 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து கிடைக்கிறது. அதிக சலுகைகளுடன் கிடைத்தும், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

ஒரே Jio ரீசார்ஜ்.. அடுத்த 200 நாட்கள்.. வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி!

ஜியோ ரூ.2025 ட்ரூ 5ஜி அன்லிமிடெட் திட்டம் (Jio Rs 2025 True 5G Unlimited Plan): ஜியோவில் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) திட்டங்களின் கீழ் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆகவே, 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.

இதுபோக 4ஜி டேட்டாவும் அதிகப்படியாக கிடைத்துள்ளது. அதாவது, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை முற்றிலும் இலவசமாக பெற்று கொள்ளலாம். இதுபோக 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவும் (2.5GB Data) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கொடுக்கப்பட்டு உள்ளது.

2.5 ஜிபி டேட்டா கிடைப்பதால், 200 நாட்களில் 500 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இது முற்றிலும் 4ஜி டேட்டாவாக இருக்கிறது. இதுவே தினசரிக்கு போதுமானதாக இருக்கும். ஒருவேளை அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்றால், இந்த டேட்டா கணக்கில் எடுக்காமலேயே இலவசமாக 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

டேட்டாவுக்கு அடுத்து முக்கியமான வாய்ஸ் கால்களை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி கால்கள் (STD Calls) கிடைத்து உள்ளது. எஸ்எம்எஸ்களை பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ள முடியும். ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கிடைக்கிறது.

இதை மொபைல் / டிவியில் (Mobile / TV) பயன்படுத்தலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 200 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டாலும், இந்த ஜியோஹாட்ஸ்டார் ஓடிடிக்கு 3 மாதங்கள் மட்டுமே சந்தா கிடைக்கும். ஆகவே, திட்டத்துக்கு முன்பாகவே ஓடிடி சந்தா முடிந்துவிடும். மேலும், 50 ஜிபிக்கா கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்டோரேஜை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வழியாக கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளும் போக ரூ.35,100 மதிப்பிலான கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டிக்கும் மேல் பயன்படுத்தலாம். நானோ பனானா உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கும். 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 True 5G Unlimited Plan With 200 Days Validity Unlimited Voice Calls 2.5 GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X