Home
News

மூட்டையை கட்டும் Jio.. இந்த ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டம் இனி கிடைக்காது.. 3 நாளுக்குள் ரீசார்ஜ் செஞ்சுக்கோங்க..

ஜியோ (Jio) நிறுவனம் புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்பாக மாற்றும் முயற்சியில் ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டங்களை அதிக நன்மையுடன் மலிவு வழங்கி வந்தது. கடந்த டிசம்பர் 11, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ஹேப்பி நியூ இயர் ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டத்தை (Jio happy new year special recharge plan) நிறுவனம் இப்போது நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஜனவரி 11, 2025 ஆம் தேதிக்கு பிறகு இந்த சிறப்பு திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது என்று அறிவித்துள்ளது.

இது என்ன திட்டம்? இதன் கீழ் கிடைக்கும் சிறப்பு நன்மைகள் என்ன என்பதை இப்பொது பார்க்கலாம். தெரியாதவர்களுக்கு, ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம், 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) புதிய சிறப்பு ப்ரீபெய்ட் திட்டத்தை (special prepaid recharge plan) அறிமுகப்படுத்தியது. இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் ஒரு சிறப்பு திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூட்டையை கட்டும் Jio.. இந்த ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டம் இனி கிடைக்காது..

மூட்டையை கட்டும் Jio.. இந்த ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டம் இனி கிடைக்காது:

ஜியோவின் 4.3 மில்லியன் பயனர்களுக்கும் புத்தாண்டு பரிசாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவொரு சிறப்பு திட்டம் என்பதனால், குறிப்பிடத்தக்க சிறப்பு நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது. இருப்பினும், இந்த குறிப்பிட்ட திட்டம் வரும் நாட்களில் ஜியோவின் ரீசார்ஜ் திட்ட பட்டியலில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என்று Jio நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் நன்மை மற்றும் விலை பற்றிய விபரங்கள் இதோ.

ஜியோ டிசம்பர் 11, 2024 அன்று ஜியோ ரூ.2025 சிறப்பு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Jio Rs 2025 Special Prepaid Recharge Plan) அறிமுகம் செய்தது. 2025 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக அதே நம்பரை கொண்ட ஒரு சிறப்பு திட்டமாக இது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு நன்மையாக இதன் வேலிடிட்டி பார்க்கப்படுகிறது. காரணம் இந்த திட்டம் 200 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை கொண்டுள்ளது.

ஜியோ ரூ.2025 சிறப்பு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Jio Rs 2025 Special Prepaid Recharge Plan):

இது ஆறு மாதங்களுக்கும் மேலான பயன்பாட்டுடன் ஜியோவின் முதல் ரீசார்ஜ் விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோ 2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 2025 ப்ரேபைட் plan), நீண்ட கால திட்டங்களைத் தேடும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி 2.5GB டேட்டா நன்மை கிடைக்கிறது. மொத்தமாக இந்த திட்டம் 500GB டேட்டா நன்மையை வழங்கி அசத்துகிறது.

இந்த ஜியோ ரூ.2025 திட்டம் (Jio Rs 2025 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையையும் ஜியோ வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ வழங்கும் இலவச நன்மையாக ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சேவைகள் பயன்படுத்த கிடைக்கிறது. இத்துடன் இலவச Jio True 5G அன்லிமிடெட் டேட்டா நன்மையும் 200 நாட்களுக்கு கிடைக்கிறது.

2025 ரூபாய் செலவில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 2150 ரூபாய்க்கு ரிவார்டு:

இந்த ரீசார்ஜ் விருப்பத்தை இன்னும் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் உடனே ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள். காரணம், இந்த திட்டம் வரும் ஜனவரி 11, 2025 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன் பிறகு ஜியோ இந்த திட்டத்தை அதன் பட்டியலில் இருந்து நீக்கிவிடும் என்று தெளிவாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பொழுது வாடிக்கையாளர்கள் ரூ.500 மதிப்புள்ள Ajio கூப்பனையும், ரூ.1500-க்கான EaseMyTrip கூப்பனையும், ரூ.150-க்கு Swiggy கூப்பனையும் பெறுகிறார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 Special Prepaid Plan Stops From January 11 2025 Recharge It Before 3 Days From Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X