ஒரே ஜியோ ரீசார்ஜ்.. 200 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. என்ன விலை?
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ நிறுவனம். அதுவும் பட்ஜெட் விலையில் மற்ற நிறுவனங்களை விட அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது ஜியோ நிறுவனம்.
எனவே தான் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 200 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 2025 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 200 நாட்கள் இந்த வேலிடிட்டி திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 500ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டத்துக்குக் கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.2025 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
குறிப்பாக 200 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை நெட்பிளிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வேண்டும் என்றால் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டத்துக்குக் கொடுக்கப்படுகிறது. பின்பு ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
அதுவும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications