Home
News

Jio SIM இருக்கா? இன்று நள்ளிரவு வரை மட்டுமே இந்த ரீசார்ஜ் கிடைக்கும்.. 200 நாளுக்கு மஜா நன்மை.. இனி கிடைக்காது

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்த 2025 ஆம் ஆண்டு புது வருட கொண்டாட்டதை புதிய ஜியோ ரூ. 2025 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் (New Year Jio Rs 2025 Prepaid Recharge Plan) வரவேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுவனம் 2025 ரூபாய் கட்டணத்துடன் 200 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (200 days validity) உடன் அறிமுகம் செய்திருந்தாலும் கூட, இதனுடன் ரூ. 2150 மதிப்பிலான கூப்பன் நன்மைகளை (Rs 2150 worth coupon benefits) இந்த திட்டம் வழங்குகிறது.

நீங்கள் கொடுத்த பணத்திற்கு அதிகமான நன்மைகளை வழங்கும் ஒரு ஸ்பெஷல் திட்டமாக இந்த ஜியோ 2025 பிளானை ஜியோ அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையை சொல்ல போனால், இந்த திட்டத்திற்காக நீங்கள் செலுத்தின 2025 ரூபாயில், 2150 ரூபாய் மதிப்பிலான கூப்பன் நன்மைகளை (Jio coupon benefit) ஜியோ உங்களுக்கு கொடுத்துவிட்டது. அப்படியானால், நீங்கள் செலுத்திய கட்டணத்திற்கு மேல் 125 ரூபாய் அதிமான நன்மையை ஜியோ கூப்பன் மூலம் வழங்கிவிட்டது.

Jio SIM இருக்கா? இன்று நள்ளிரவு வரை மட்டுமே இந்த ரீசார்ஜ் கிடைக்கும்..

Jio SIM இருக்கா? இன்று நள்ளிரவு வரை மட்டுமே இந்த ரீசார்ஜ் கிடைக்கும்:

இதற்கு மேல் இந்த திட்டத்துடன் 200 நாட்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏறக்குறைய உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளலாம். அந்த அளவிற்கு இந்த ஜியோ ரூ. 2025 திட்டத்துடன் ஜியோ நிறுவனம் நன்மைகளை வாரி வாழங்கியுள்ளது. இத்தகைய சிறப்பான திட்டம் ஜனவரி 31, 2025 நள்ளிரவு முதல் கிடைக்காது என்று முன்பே ஜியோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் இந்த திட்டம் இன்று நள்ளிரவு முதல் கிடைக்க போவதில்லை (Jio limited offer time plan ends today) என்று கூறப்படுகிறது. ஒருவேளை இறுதி நேரத்தில் ஜியோ (Jio) நிறுவனம் மனசு மாறி இந்த திட்டம் கிடைக்கும் தன்மையின் நாட்களை அதிகப்படுத்தினால், இன்னும் சில வாடிக்கையாளர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது. சரி, இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது தெளிவாக பார்க்கலாம்.

ஜியோ ரூ. 2025 திட்டம் (Jio Rs 2025 Plan):

ஜியோ ரூ. 2025 திட்டம் 200 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 200 days validity plan) உடன் வருகிறது. இந்த 200 நாட்களுக்கு இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை, தினசரி 2.5GB டேட்டா (jio 2,5GB dataper day) நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

இந்த திட்டம் Jio 5ஜி (Jio 5G) வட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data) நன்மையையும் வழங்குகிறது. இது தவிர இந்த திட்டம் வழக்கம் போல, ஜியோவின் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற சேவைகளுக்கான இலவச அணுகலை வழங்குகிறது.

2150 ரூபாய் மதிப்பிலான இலவச கூப்பன்.. என்னென்ன நன்மைகள்:

இந்த திட்டத்துடன் ஜியோ வழங்கும் 2150 ரூபாய் மதிப்பிலான கூப்பன் நன்மை (Jio Rs 2150 worth coupon benefit) கீழ் என்னென்ன கிடைக்கிறது என்பது இங்கே. ரூ.500 மதிப்புள்ள Ajio கூப்பனையும், ரூ.1500-க்கான EaseMyTrip கூப்பனையும், ரூ.150-க்கு Swiggy கூப்பனையும் வழங்குகிறது. ரூ.2999 அல்லது அதற்கு மேல் ஷாப்பிங் செய்யும் போது ஏஜியோ (Ajio) வழங்கும் ரூ.500 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும். கூடவே விமான பயணங்களை முன்பதிவு செய்ய ஈஸ்மைட்ரிப்பில் (EaseMyTrip) இருந்து ரூ.1500 தள்ளுபடி சலுகை கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 Prepaid Plan Availability Ends On January 31 2025 Hurry and Recharge Immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X