Home
News

விட்ராதீங்க ப்ரோ.. முழுசா 200 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 500 ஜிபி டேட்டா.. ரூ.2025-க்கு இன்னும் இருக்கு!

2025ஆம் ஆண்டுக்காக பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட புது ஜியோ திட்டம் (New Jio Plan) இப்போதும் கிடைக்கிறது. ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு இந்த திட்டம் கிடைக்காது என்று அறிவித்திருந்த நிலையில் இப்போதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. 200 நாட்களுக்கு டேட்டா (Data) மற்றும் வாய்ஸ் கால்களை (Voice Calls) அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 2025 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது. ஏனென்றால், 200 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

விட்ராதீங்க ப்ரோ.. முழுசா 200 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 500 ஜிபி!

ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாமலேயே 500 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு அடுத்தபடியாக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, 2.5 ஜிபி டேட்டா அல்லது 5ஜி டேட்டா இல்லாத நேரத்திலும் 64 கேபிபிஎஸ் டேட்டா கிடைக்கும்.

அதேபோல 200 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகைகள் இருக்கிறது. இப்போது, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகை பற்றி தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு வேறு எந்தவொரு டேட்டா வவுச்சரும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தேவைப்படாது.

இந்த சலுகைகள் போக டேட்டாவை போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புது வருட திட்டத்துக்கும் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்களின் சலுகைகள் கிடைக்கிறது. இந்த ஓடிடி ஆப்களில் பிரீமியம் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. இலவச ஸ்ட்ரீமிங் கன்டென்ட்கள் கிடைக்கிறது.

இந்த திட்டம் புது வருட சலுகையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி 31ஆம் தேதி வரையில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இது கஸ்டமர்களிடையே தனி வரவேற்பு பெற்றதால், இன்றளவும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது நீட்டிக்கப்படலாம் அல்லது சில வாரங்களுக்கு பிறகு நீக்கம் செய்யப்படலாம். ஆகவே, இப்போதே பயன்படுத்துவது நல்லது.

இந்த ப்ரீபெய்ட் திட்டம் 200 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. அதுவே வாய்ஸ் கால்கள் மட்டும் போதும் என்றால், ரூ 1748 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட அதிகம் அதே நேரத்தில் விலையும் மலிவாக கிடைக்கிறது. ஆனால், விலைக்கேற்ப சலுகை உள்ளது.

அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். கூடவே 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், டேட்டா மற்றும் 5ஜி டேட்டா சலுகை கிடைக்காது. ஆகவே, வாய்ஸ் ஒன்லி திட்டமாக மட்டுமே இதை பயன்படுத்தி கொள்ள முடியும். ஜியோ ஆப்கள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 Plan With 500GB Data Unlimited Voice Calls New Year Recharge Plan Still Available
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X