Home
News

அதுதான் சார் அம்பானி.. இனிமே 200 நாட்கள் ஜமாய்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா.. இப்போது ஓடிடி சந்தா!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களமிறக்கிய புதிய திட்டத்தில் இப்போது 90 நாட்களுக்கு இலவச ஓடிடி சந்தா கிடைக்கிறது. ஏற்கனவே, 200 நாட்களுக்கு அடிமட்ட விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் கிடைத்தது. ஓடிடி மட்டுமே குறையாக இருந்தது. இனிமேல் அதுவும் கிடைக்க இருக்கிறது. இந்த 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

2025ஆம் ஆண்டு புது வருடத்தை முன்னிட்டு ஜியோ ரூ 2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 2025 Prepaid Plan) களமிறக்கப்பட்டது. லிமிடெட்-பிரீயட் திட்டமாக அறிவிக்கப்பட்டு, பிறகு கஸ்டமர்களிடையே அதிக வரவேற்பு பெற்றதால், அப்படியே இருந்துவிட்டது. இப்போதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. சொல்லப்போனால், 200 நாட்கள் வேலிடிட்டியில் இந்த திட்டம் மட்டுமே கிடைக்கிறது.

அதுதான் சார் அம்பானி.. இனிமே 200 நாட்கள் ஜமாய்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் இதுபோன்ற வேலிடிட்டியில் திட்டங்கள் இல்லை. இந்த திட்டத்தில் சலுகைகளை பார்த்தால் ஜியோ மட்டுமல்ல, மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்களே மூக்கில் விரல் வைத்து விடுவார்கள். முதலில் இந்த சலுகைகளை பார்த்துவிட்டு, புதிதாக சேர்க்கப்பட்ட ஓடிடி சந்தாவை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 2025 திட்டம் லாங் வேலிடிட்டி (Jio Rs 2025 Plan Long Validity): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பே சொன்னதை போல 200 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, 6 மாதங்களுக்கு மேல் 20 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் ஜியோ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படும்.

இந்த 5ஜி டேட்டா மட்டுமல்ல, 4ஜி டேட்டாவும் இதில் கிடைக்கிறது. ஆகவே, 2.5 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு பயன்படுத்த முடியும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. இந்த டேட்டாவை போலவே வாய்ஸ் கால்களும் இருக்கின்றன. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி கால்கள் (STD Calls) கிடைக்கிறது.

அதே நேரத்தில் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். மேலும், 200 நாட்கள் முழுவதும் 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு அடுத்து ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இப்போது புதிதாக சேர்க்கப்பட்ட சலுகையை பார்ப்போம்.

மேற்கண்ட சலுகைகளை கொடுத்தாலும், அந்த டேட்டாவுக்கு ஏற்ப ஓடிடி சலுகையை இல்லையே என்ற கேள்வி ஜியோ கஸ்டமர்களிடையே இருந்தது. இதை ஐபிஎஸ் 2025 போட்டிகள் நிறைவேற்றி இருக்கிறது. அதாவது, ஐபிஎல் போட்டிகள் ஜியோசினிமாவில் ஒளிபரப்பு செய்யப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால், 2025ஆம் ஆண்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் ஒன்றாக சேர்ந்து, ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியாக மாறியது. இதனால், கஸ்டமர்களை தட்டித்தூக்கும்படி ஜியோ நிறுவனம் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை இந்த திட்டத்தில் இலவசமாக கொடுத்து இருக்கிறது. இது ஐபிஎல் போட்டிகளுக்காக பிரத்யேகமாக கிடைப்பதால், ஒரு முறை மட்டுமே ஓடிடி கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 Plan With 200 Days Validity Unlimited Voice Calls JioHotstar Check Long Validity Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X