Home
News

முகேஷ் அம்பானிக்கு கும்பிடு.. இனிமே 200 நாட்கள்.. 500 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. Jio யூசர்கள் குஷி!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கஸ்டமர்கள் இனிமேல் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய 365 நாட்களுக்கு சலுகைகளை கொடுக்கும் வருடாந்திர திட்டங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டியது கிடையாது. அதைவிட மலிவான விலையிலும், 200 நாட்கள் வேலிடிட்டியும் (200 Days Validity) கொடுக்கும்படி மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ், டேட்டா, ஓடிடி போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஜியோவில் 365 நாட்கள் வேலிடிட்டியில் 2 திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ரூ.3,599 மற்றும் ரூ.3,999 ஆகிய விலைகளில் கிடைக்கின்றன. இந்த விலைக்கு ஏற்ப சலுகைகள் இருந்தாலும், பெரும்பாலான யூசர்களுக்கு இது மிகவும் அதிகமாகவே தோன்றுகிறது. இதனால், பட்ஜெட் விலையில் அதிக வேலிடிட்டி மற்றும் சலுகைகளை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ரூ.2,025 திட்டம் களமிறக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானிக்கு கும்பிடு.. இனிமே 200 நாட்கள்.. 500 ஜிபி டேட்டா!

ஜியோ ரூ 2025 திட்ட விவரங்கள் (Jio Rs 2025 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 மாதங்களுக்கு மேல் 20 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, 200 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளுடன் அதிகப்படியான டேட்டாவை கொடுக்கிறது. அதென்ன அதிகப்படியான டேட்டா என்றால், இதில் நாளொனுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இதை 200 நாட்களுக்கு கணக்கிட்டால், 500 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கிடைப்பதால், இந்த 500 ஜிபிக்கு மேலும் உங்களால் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடிகிறது. ஒருவேளை நீங்கள் 4ஜி டேட்டாவை மட்டுமே பெற்றாலும், 2.5 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, ஜியோ நிறுவனத்தில் வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 200 நாட்கள் வேலிடிட்டியில் டேட்டாவில் பட்டையை கிளப்பலாம். மற்ற சலுகைகள் வழக்கம்போல கிடைக்கின்றன. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஜியோ டிவி (Jio TV) மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) ஓடிடி சலுகையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சந்தாவானது முதல் 90 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். அதேபோல ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.

இதைவிட மலிவான விலைக்கு அதிக வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மற்றொரு திட்டமும் கிடைக்கிறது. ஆனால், அதில் டேட்டா, ஓடிடி போன்ற சலுகைகளை எதிர்பார்க்கவே முடியாது. முழுக்க முழுக்க வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை மட்டுமே பெற்று கொள்ள முடியும். இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): இதுவொரு வாய்ஸ் ஒன்லி (Voice Only) திட்டமாகும். ஆகவே, 336 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளை கொடுக்கிறது. இதுபோக 3600 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சலுகைகள் வருகிறது. இந்த சலுகைகளுக்கு மேல் வேறு சலுகைகள் கிடைக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 Plan With 200 Days Validity 500GB Data Unlimited Voice Calls JioHotstar Mobile OTT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X