Home
News

புது வருட ரீசார்ஜ்.. 1 சதவீதம் கோல்டு.. 200 நாட்கள் வேலிடிட்டி.. 2025 முடியுற டைம்ல அம்பானி கொடுக்கும் ஆஃபர்!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பிரத்யேக திட்டமாக ரூ.2025 ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, 2026ஆம் ஆண்டே வரப் போகிறது. ஆகவே, 2026 நியூ இயர் ஆஃபரை ஜியோ நிறுவனத்திடம் இருந்து ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கலாம். ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பது தெரியாது. இருப்பினும், ரூ.2025 விலைக்கு கிடைக்கும் திட்டத்தின் சலுகைகளை பார்க்க வேண்டும். ஏனென்றால், இதேபோல சலுகைகளே 2026ஆம் ஆண்டுக்கான திட்டத்திலும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஜியோ ரூ 2025 திட்ட விவரங்கள் (Jio Rs 2025 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது 6 மாதங்களுக்கும் மேலாக இருக்கிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. 200 நாட்களுக்கு மொத்தமாக 500 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 2.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

புது வருட ரீசார்ஜ்.. 1 சதவீதம் கோல்டு.. 200 நாட்கள் வேலிடிட்டி.. 2025!

இந்த டேட்டாவை போலவே வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) சலுகைகளாக கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுக்கிறது. மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) சந்தா கொடுக்கிறது. இவை இந்த திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகளாக இருக்கிறது.

சமீபத்தில் கூடுதலாக பல்வேறு சலுகைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இலவச ஓடிடி தொடங்கி இலவச கோல்டு சலுகை வரையில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் வழியாக ஜியோ கோல்டு (Jio Gold) வாங்கினால், அதன் மதிப்பில் இருந்து கூடுதலாக 1 சதவீத கோல்டு இலவமாக கொடுக்கப்படும். இதில் ரூ.100 விலைக்கும் கோல்டு வாங்கலாம்.

ஆகவே, 1 ரூபாய் மதிப்புள்ள கோல்டு கூடுதலாக கிடைக்கும். அதுவே ரூ.1000 விலைக்கு வாங்கினால், ரூ.10 மதிப்புள்ள கோல்டு கூடுதலாக கிடைக்கும். மேலும், ஜியோஹோம் (JioHome) சலுகையும் இதில் கிடைக்கிறது. 2 மாதங்களுக்கு ப்ரீ ட்ரையல் போல இதை பெற்று கொள்ளலாம். இதில் வை-பை டேட்டா, ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படும்.

இந்த சலுகை மட்டுமே ஜியோ ஃபைபர் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அடுத்து ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தா கிடைக்கிறது. இதை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. இதை ஜியோ ஏஐ கிளவுட் ஆப் வழியாக கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

இவ்வளவு சலுகைகளும் போக 18 மாதங்களுக்கு பயன்படுத்தும்படி கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை பெறுவதற்கு 18 வயது அல்லது அதற்கு மேல் வயது இருக்க வேண்டும். இந்த சலுகைகளையே ஜியோ ரூ 2025 திட்டம் கொடுக்கிறது. 2026ஆம் ஆண்டுக்காக இதேபோல புது வருட திட்டம் கிடைக்கும். அதில் இதே போல சலுகைகள் இருக்கும்.

மேலும், புது வருடத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், ரூ.3599 விலை கொண்ட திட்டத்துக்கு செல்லலாம். இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். முந்தைய திட்டத்தில் பார்த்த ஒட்டுமொத்த சலுகைகளும் கிடைக்கும். வேலிடிட்டி மட்டும் வருடம் முழுவதும் கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா இதற்கும் கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 Plan With 1 Percent Free Jio Gold 200 Days Validity Check 2025 New Year Plan Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X