Home
News

2026 க்கு ஏற்ற Jio பிளான்.. ஒரே ரீசார்ஜ் 200 நாளுக்கு ஓஹோன்னு நன்மைகள்.. 500GB டேட்டா, வாய்ஸ், SMS எல்லாம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, புதிய 2026 ஆம் ஆண்டிலும் கூட அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து ரூ.2025 திட்டத்தை வழங்கி வருகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த திட்டம் கடந்த ஆண்டு, அதாவது 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும் இந்த திட்டம் சிறந்த நன்மைகளை வழங்குவதாலும், ஜியோ பயனர்கள் தொடர்ந்து இதை தேர்வு செய்து வருவதாலும்.. 2026 ஆம் ஆண்டு வந்தும் கூட தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. வழக்கமான (டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ்) நன்மைகளை ஒருபக்கம் இருக்க, இந்த திட்டத்துடன் கூகுள் ஜெமினி ப்ரோ இலவச சந்தா உட்பட பல கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது.

Jio.. ஒரே ரீசார்ஜ் 200 நாளுக்கு ஓஹோன்னு நன்மைகள்!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.2025-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2025 திட்டத்தின் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும். இந்த திட்டம் மொத்தம் 500 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, அதாவது பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கும். இதோடு பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் பெறுவார்கள்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, புதிய கனெக்ஷன்களுக்கு 2 மாதங்களுக்கு ஜியோஹோம் சோதனை இலவசமாக கிடைக்கும். இதோடு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா 3 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும். மேலும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜில் 50ஜிபி இலவசமாக கிடைக்கும்.

கடைசியாக ரூ.2025-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) திட்டத்தை இலவசமாக பெறுவார்கள். இந்த் சாந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும். மேலும் இது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஓடிடி சலுகைகள், போதுமான அளவு டேட்டா மற்றும் 200 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் - இந்த திட்டம் இன்னும் மதிப்புக்குரியதாக உள்ளத. நிச்சயமாக, ஜியோ நிறுவனத்தின் கேள் இன்னும் மலிவான திட்டங்கள் உள்ளன, ஆனால் இந்த திட்டத்தில் ஒருவர் விரும்பும் அனைத்தும் உள்ளன. ஜியோ ரூ.2025 திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மற்றும் மைஜியோ ஆப்பில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

1 முழு ஆண்டும் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு ரூ.3,999 திட்டம் - தனித்து நிற்கும் ஒரு ஆப்ஷன் ஆக இருக்கிறது. இது டெய்லி 2.5 ஜிபி டேட்டாவுடன் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இது அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை தவிர்க்க விரும்பும், அதே சமயம் அதிக டேட்டாவை நுகரும் பயனர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

மற்றொரு வலுவான வருடாந்திர விருப்பம் ரூ.3,599 திட்டம் ஆகும். இது 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தையும், டெய்லி 2.5 ஜிபி தினசரி டேட்டாவையும் வழங்கும். இது ரூ.3,999-க்கான சற்றே விலை குறைந்த மாற்றாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் குறைந்த செலவில் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியை விரும்பும் பயனர்களுக்கு ரூ.2,025 திட்டம் உள்ளது

கடைசியாக ரூ.1,799 திட்டம் உள்ளது. இது அதிக டேட்டா மற்றும் 3 மாத கால வேலிடிட்டி என்கிற காம்பினேஷனை தேடும் பயனர்களை இலக்காக கொண்டுள்ளது, இது தொகுக்கப்பட்ட ஓடிடி அணுகலுடன் 3 ஜிபி தினசரி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. லாங் வேலிடிட்டி விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்கள் மேற்கண்ட 4 திட்டங்களில் எதை வேண்டுமானாலும் கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 Plan is Still One Of The Best Plan in 2026 With 200 Days Validity 500GB Data Google Gemini Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X