Home
News

Jio ஒரே ரீசார்ஜ்.. இனி 84 இல்ல.. 90 இல்ல.. 200 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 84 நாட்கள், 90 நாட்கள் வேலிடிட்டிக்கு மேலாகவும், 365 நாட்கள் வேலிடிட்டிக்கு குறைவாகவும் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், அவர்களுக்கு ஒரேவொரு திட்டம் மட்டுமே கிடைக்கிறது. இதில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோ கோல்டு, கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 2025 திட்ட விவரங்கள் (Jio Rs 2025 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, 200 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த வேலிடிட்டியில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களில் திட்டங்கள் கிடையாது. ஜியோவில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நாட்களில் அதிகப்படியான டேட்டா கிடைக்கிறது.

Jio ஒரே ரீசார்ஜ்.. இனி 84 இல்ல.. 90 இல்ல.. 200 நாட்கள் வேலிடிட்டி!

ஆகவே, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். 200 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், அந்த நாட்களுக்கு மொத்தமாக 500 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா சலுகை இல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.

இந்த டேட்டா சலுகைகளுக்கு ஏற்ப ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கம்போலவே கொடுக்கப்படுகின்றன. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை ஜியோ கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம்.

அதே நேரத்தில் தினமும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கிடைக்கிறது. இந்த சலுகையில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. இதை ஜியோ மொபைல் நம்பர் மூலம் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஜியோ கிளவுட் ஆப் மூலம் இதை பயன்படுத்தலாம். அதேபோல ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கும் இந்த திட்டத்தில் சலுகை கிடைக்கிறது. அதாவது, ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக டிஜிட்டல் கோல்டு விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் டிஜிட்டல் கோல்டு வாங்கினால், அந்த மதிப்பில் இருந்து 2 சதவீத கோல்டு கூடுதலாக கிடைக்கும்.

இந்த திட்டத்தில் அந்த சலுகை கிடைக்கிறது. இதை பெறுவதற்கு +91-8010000524 என்னும் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் போதும், டிஜிட்டல் கோல்டில் 2 சதவீத கூடுதல் கோல்டை கிளைம் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஜியோ ஹோம் (Jio Home) சலுகை கொடுக்கப்படுகிறது. இதை புதிய கஸ்டமர்கள் மட்டுமே பெற்று கொள்ள முடியும்.

அதாவது, ஜியோ ஃபைபர் சேவை மூலம் கிடைக்கும் சலுகைகள் 2 மாதங்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதில் வை-பை ரூட்டர் மூலம் டேட்டா சேவை கொடுக்கப்படும். அதேபோல ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கிடைக்கும். இதற்கான டிவைஸ்களும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும்.

இந்த சலுகையை மைஜியோ ஆப் அல்லது ஜியோ வெப்சைட் மூலம் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆனால், இதற்கு ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் சேவைகள் உங்களது ஏரியாக்களில் கிடைக்க வேண்டும். இல்லையென்றால், கொடுக்கப்படாது. இந்த 2 மாதங்களுக்கு பிறகு கட்டணம் செலுத்தி சேவையை தொடரலாம். இந்த சலுகைகளே இதில் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 2025 Plan 200 Days Validity Unlimited Voice Calls 500GB Data Check Unlimited 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X