Home
News

பழையபடி ரீசார்ஜ்.. 2026 ஆம் ஆண்டுக்கு கோல்டு.. உடனே இதை பண்ணுங்க... அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2.5GB டேட்டா!

ஜியோ கஸ்டமர்களுக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு கொடுக்கப்பட்ட ரூ.2025 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வருகிற 2026 ஆம் ஆண்டிலும் கிடைக்க இருக்கிறது. ஆனால், இந்த வருடத்தில் கூடுதலாக பல்வேறு சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு கஸ்டமர்களுக்கு சலுகைகளை கொடுப்பது வழக்கமாக வைத்து வருகிறது. ஆகவே, 2025 ஆம் ஆண்டு வந்த போது, அந்த ஆண்டின் எண்ணின்படியே ரூ.2025 மதிப்பிலான திட்டத்தை கொடுத்தது. இந்த திட்டத்துக்கு 6 மாதங்களுக்கு மேல் அதாவது 200 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தது.

பழையபடி ரீசார்ஜ்.. 2026 ஆம் ஆண்டுக்கு கோல்டு.. உடனே இதை பண்ணுங்க!

இந்த வேலிடிட்டியில் மற்ற நிறுவனங்களில் திட்டங்கள் கிடையாது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டா போன்ற சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன. இப்போது, 2026 ஆம் ஆண்டு வர இருப்பதால், இந்த திட்டத்தின் விலையும் ரூ.2026 ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எந்த மாற்றமும் செய்யாமல் பழையபடியே ரூ.2025 விலையில் தொடர்ந்து கிடைக்க உள்ளது. ஆனால், இந்த முறை கூடுதலாக ஓடிடி சலுகைகள், லைவ் டிவி சேனல்களின் சலுகைகள், ஜியோ ஃபைனான்ஸ் ஆப் வழியாக ஜியோ கோல்டு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 2025 திட்ட விவரங்கள் (Jio Rs 2025 Plan Details): இந்த புது வருட திட்டத்துக்கு 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த டேட்டா சலுகைகளுடன் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா என்பது 500 ஜிபி மொத்த டேட்டாவாகும். இதை 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) கிடைக்கிறது.

இந்த வாய்ஸ் கால்களை 200 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் 200 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். மேலும், ஜியோ சிறப்பு சலுகையாக 4 சலுகைகள் கூடுதலாக கிடைக்கும். அதேபோல கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் கொடுக்கப்படும். கூடுதல் சலுகையில் முதலாவது ஜியோ கோல்டு சலுகையாகும்.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தவுடன் +91-8010000524 என்னும் நம்பருக்கு மிஸ்ட் கார்டு கொடுத்தால், 1 சதவீத ஜியோ கோல்டு கொடுக்கப்படும். இதை ஜியோ ஃபைனான்ஸ் ஆப் வழியாக மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதேபோல வாங்கப்படும் டிஜிட்டல் கோல்டின் கணக்கில் இருந்து 1 சதவீதம் மட்டுமே இலவமாக கொடுக்கப்படும்.

மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை மொபைல் மற்றும் டிவிகளில் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். ஆனால், 3 மாதங்களுக்கு மட்டுமே இந்த சந்தா கிடைக்கும். ஜியோ ஹோம் வை-பை திட்டம் வழியாக வை-பை டேட்டா, லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சலுகை கொடுக்கப்படும்.

ஆனால், இதை புக்கிங் செய்து மட்டுமே பயன்படுத்த முடியும். 2 மாதங்களுக்கு டிரையல் முறையில் கொடுக்கப்படும். பிறகு கட்டணம் செலுத்தி திட்டத்தை தொடர்ந்து கொள்ளலாம். 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். ஆனால், இதை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X