Jio பயனர்களுக்கு ட்ரீட்! 252 நாளுக்கு தினமும் 2.5ஜிபி டேட்டா! தாராள நன்மை கிடைக்கும் புது திட்டம் இதோ!
இந்த 2023 ஆம் ஆண்டில் பெஸ்ட் ஜியோ ரீசார்ஜ் திட்டமாக நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 252 நாள் வேலிடிட்டி திட்டம் திகளப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், இது 252 நாட்களுக்கும் தினமும் 2.5ஜிபி டேட்டாவை வாரி வழங்குகிறது.
Jio நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரீசார்ஜ் திட்டமானது நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குவதோடு, ஒட்டுமொத்தமாக 252 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் இப்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், நீண்ட நாட்களுக்கு அதிக டேட்டா விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு பெஸ்ட் திட்டமாக இருக்கிறது.

இந்தியாவில் ஜியோ தனது ஆட்டத்தை மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு வருகிறது. குறிப்பாக, ஜியோ நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர்கள் ஆன ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஜியோ பல வழிகளில் போட்டியிட்டு வருகிறது. இதன் காரணமாக, டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வரிசையில், ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான் இந்த ஜியோ ரூ.2023 விலை கொண்ட திட்டமாகும். ரூ.2023 என்ற விலை நேரடியாக இந்த 2023 ஆம் ஆண்டின் எண்களை குறிப்பிடுகிறது. இது இந்த திட்டத்தின் விலையை மக்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிவதை நோக்கமாக கொண்டு வைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.
ஜியோ தனது வியாபாரத்தில் இப்படி சிறிய நுணுக்கங்களை பல காலமாக செய்து வருகிறது. மக்களை கவரும் விதத்தில், அதன் ரீசார்ஜ் திட்டங்களுடன் கிடைக்கும் நன்மைகளை மிகவும் சுவாரஸ்யமானதாக அமைத்து வருகிறது. இந்த வரிசையில் சேர்ந்துள்ள புதிய திட்டம் தான் இந்த Jio Rs 2023 Prepaid Recharge Plan ஆகும். முன்பே சொன்னது போல, இந்த திட்டம் 252 நாள் செல்லுபடியாகும் நீண்ட வேலிடிட்டியை கொண்டுள்ளது.

இந்த திட்டம் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் முழுமையான காலத்தில் இந்த திட்டம் சுமார் 630 ஜிபி டேட்டாவை தடையின்றி வழங்குகிறது. இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் அணைத்து நெட்வொர்க்குமான அழைப்பு நன்மையை அன்லிமிடெட்டாக இலவசமாக வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 SMS நன்மையையும் கிடைக்கிறது.
இது தவிர இந்த ஜியோவின் ரூ.2023 விலை திட்டம் JioTV, JioCinema, JioSecurity, JioCloud, போன்ற ஜியோவின் பல இலவச சேவைகளையும் அணுக அனுமதிக்கிறது. இந்த இலவச நன்மைகள் அணைத்தும் அதன் ஒட்டுமொத்த வேலிடிட்டி நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. FUP வரம்பிற்கு பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். அதே நேரத்தில், தகுதியான பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டா வசதியைப் வழங்குகிறது.
நீண்ட நாட்களுக்கு ரீசார்ஜ் பற்றிய கவலையே இல்லாமல், 2000 ரூபாய் செலவில் நிம்மதியான ஸ்மார்ட்போன் அனுபவத்தை டேட்டா பற்றாக்குறை இன்றி அனுபவிக்க ஆசை என்றால், இந்த ஆண்டில் நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய சரியான திட்டம் இந்த ஜியோ ரூ.2023 திட்டம் மட்டுமே.


Click it and Unblock the Notifications