Home
News

கேபிள், DTH க்ளோஸ்.. Jio SIM-க்கு 1000+ லைவ் டிவி சேனல்கள்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. பிரீமியம் OTT சந்தா!

ஜியோ நிறுவனத்தின் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இதில் சன் டிவி, கே டிவி உள்ளிட்ட முக்கிய சேனல்கள் மட்டுமல்லாமல், டிஸ்கவரிபிளஸ் போன்ற சேனல்களும் கிடைக்கும். இதுபோக பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவும் ஒரு வருடம் முழுவதும் கிடைக்கும். இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

இது கேபிள் டிவி அல்லது டிடிஎச் போல கிடைக்காது. ஜியோடிவி ஆப் வழியாக மொபைலில் பார்த்து கொள்ளும்படி கிடைக்கும். இருப்பினும், ஓடிடி உள்ளிட்ட சலுகைகளை டிவியிலும் லாகின் செய்து பார்த்து கொள்ளலாம். இதுபோன்ற திட்டங்கள் ரூ.50 முதல் கிடைக்கின்றன. ஆனால், மாத வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். நாம் பார்க்க இருப்பது 365 நாட்கள் திட்டமாகும்.

கேபிள், DTH க்ளோஸ்.. Jio SIM-க்கு 1000+ லைவ் டிவி சேனல்கள்!

ஜியோ ரூ.2000 திட்ட ஆஃபர்கள் (Jio Rs 2000 Plan Offers): இதுவொரு டேட்டா மற்றும் ஓடிடி திட்டமாக இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் அடிப்படை திட்டம் (Base Plan) இருப்பது கட்டாயமாகும். அதிலும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு பதில், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ ரூ.3599 மற்றும் ஜியோ ரூ.3999 திட்டங்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் மட்டுமே பெற முடியும்.

இந்த திட்டத்தில் மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 365 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும், தகுதியானவர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. டேட்டா சலுகை மட்டுமின்றி, 365 நாட்களுக்கு பிரீமியம் ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் இதில் கூடுதலாக கிடைக்கிறது.

குறிப்பாக, யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile) ஆகிய பிரீமியம் ஓடிடி சந்தாக்கள் இதில் கிடைக்கின்றன. இவற்றை மைஜியோ ஆப் வழியாக ஆக்டிவ் செய்து, பிரத்யேக ஆப்களில் பயன்படுத்தலாம். மேலும், ஜியோ மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்து ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி ஆப்பையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுதவிர, ஜியோ டிவி ஆப் வழியாகவே இதர பிரபல ஓடிடி ஆப்களை 365 நாட்களுக்கு அணுக முடியும். இதில் சன் நெக்ஸ்ட் (Sun NXT), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாக்கள் கிடைக்கின்றன. ஆகவே, பிரீமியம் கன்டென்ட்களை பார்க்க முடியும்.

மேலும், ஃபேன்கேட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play), ஹோய்சோய் (Hoichoi), சாவ்பால் (Chaupal), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் தாரங் பிளஸ் (Tarang Plus) ஆகிய ஓடிடி சந்தாக்களும் ஜியோ டிவி ஆப்பில் கிடைக்கின்றன. இவற்றுடன் 1000+ லைவ் டிவி சேனல்களையும், பிரீமியம் தமிழ் சேனல்களையும் கஸ்டமர்கள் ஜியோ டிவியில் லைவ்வில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த லைவ் டிவி பட்டியலில் சன்டிவி நெட்வொர்க் (Sun TV Network), சோனி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (Sony Entertainment Network) மற்றும் ஈடிவி நெட்வொர்க் (ETV Network) நிறுவனங்களின் சேனல்கள் உள்ளன. அதேபோல வார்னர் ப்ரோஸ் (Warner Bros) மற்றும் டிஸ்கவரி (Discovery) நிறுவனங்களின் பிரீமியம் சேனல்களையும் ஒரு வருடத்திற்கு முழுமையாக பார்த்துக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 2000 Plan Offers 1000 Live TV Channels From JioTV With JioStar Sony Sun TV ETV Networks
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X