கேபிள் TV தலையில் இடி.. ரூ.2000-க்கு 1 வருட TV பில்.. 1000+ லைவ் சேனல்கள்.. 365 ஜிபி டேட்டா.. 15+ ஓடிடி சந்தா!
வீடுகளில் மாதந்தோறும் கட்டப்படும் கேபிள் டிவி (Cable TV) மற்றும் டிடிஎச் (DTH) கட்டணங்களுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, மலிவான விலையில் லைவ் டிவி சேனல்கள் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. வெறும் ரூ.2,000 பட்ஜெட்டில், ஒரு ஆண்டுக்கு தேவையான லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) மற்றும் பிரீமியம் ஓடிடி (Primium OTT) ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது.
ஜியோ ரூ.2,000 திட்ட விவரங்கள்: இதுவொரு பிரத்யேக டேட்டா மற்றும் என்டர்டெயின்மென்ட் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு 365 நாட்கள் வேலிடிட்டி (Validity) வழங்கப்படுகிறது. மொத்தமாக 365 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) டேட்டா கொடுக்கப்படுகிறது. 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும்.

1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் வருகின்றன. ஜியோ டிவி ஆப் வழியாக சன் டிவி (Sun TV), சோனி எண்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), டிஸ்கவரி, வார்னர் ப்ரோஸ் மற்றும் ஈடிவி போன்ற முன்னணி நெட்வொர்க்குகளின் பிரீமியம் தமிழ் சேனல்கள் உட்பட 1000-க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களை எந்நேரமும் கண்டு ரசிக்கலாம்.
15-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5, சன் நெக்ட்ஸ், ஃபேன் கோட் மற்றும் ஈடிவி வின் போன்ற பல ஓடிடி தளங்களின் சந்தாக்கள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. இவற்றை மைஜியோ ஆப் மற்றும் ஜியோ டிவி மூலமாக எளிதில் ஆக்டிவேட் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த ரூ.2,000 ஓடிடி பாஸ் திட்டமானது ஒரு ஆட்-ஆன் (Add-on) டேட்டா பேக் என்பதால், உங்கள் சிம் கார்டில் ஏற்கனவே ஒரு ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, வெறும் வாய்ஸ் கால் திட்டங்களை வைத்திருப்பவர்கள் இதை பெற முடியாது. மாறாக, ஜியோவின் ரூ.3,599 அல்லது ரூ.3,999 போன்ற வருடாந்திர அன்லிமிடெட் திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஒருவேளை மாதாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இதுபோல லைவ் டிவி சேனல்கள் வேண்டுமானால், ஜியோ ரூ.200 திட்டமானது பக்காவான தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் கஸ்டமர்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டாவுடன் சேர்த்து, ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கிறது.
முந்தைய திட்டத்தை போலவே 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை எந்தவித தடையுமின்றிப் பார்த்து ரசிக்கலாம். மேலும், ஜியோடிவி மற்றும் மைஜியோ ஆப்கள் மூலமாக சோனி லிவ், ஜீ5, சன் நெக்ட்ஸ், ஃபேன் கோட், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரிபிளஸ் போன்ற 15-க்கும் மேற்பட்ட முன்னணி ஓடிடி தளங்களின் சந்தாக்களும் இதில் இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த திட்டத்துக்கும் ஏற்கனவே பேஸ் ஆக்டிவ் ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இந்த கஸ்டமர்கள் இந்த ரூ.200 ஆட்-ஆன் திட்டத்தை எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம். ஓடிடி ஆப்கள் மற்றும் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். கேபிள் மற்றும் டிடிஎச் செலவுகளை மிச்சப்படுத்த விரும்பும் மக்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இவை ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற திட்டங்களாகும்.


Click it and Unblock the Notifications