Home
News

கேபிள் TV, DTH-க்கு கும்பிடு.. மாதம் ரூ.166-க்கு 1000+ சேனல்கள்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 15+ ஓடிடி சந்தா!

ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டு இருந்தால் போதும், 1000+ லைவ் டிவி சேனல்களை வருடம் முழுவதும் பார்த்து கொள்ளலாம் என்றால் நம்ப முடிகிறது. டிடிஎச், கேபிள் டிவி போன்ற பிரத்யேக கனெக்சன் இல்லாமல், நேரடியாக லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகிறது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜியோ டிவி (JioTV) வழியாக லைவ் டிவி சேனல்களை கொடுக்கும் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக ஜியோ ரூ.2000 திட்டம் இருக்கிறது. லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக ஓடிடி ஆப்கள் மற்றும் டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது.

கேபிள் TV, DTH-க்கு கும்பிடு.. மாதம் ரூ.166-க்கு 1000+ சேனல்கள் சந்தா!

ரூ.2000 விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதில் 1 மாதத்துக்கு ஏற்படும் செலவை கணக்கிட்டால் வெறும் ரூ.166 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய ஏற்கனவே ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும்.

இந்த ஆக்டிவ் திட்டத்துக்கும 365 நாட்கள் வேலிடிட்டி இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே, ஜியோ ரூ.2000 திட்டத்தை பெற்று கொள்ள முடியும். ஜியோ ரூ.3599 திட்டம் அல்லது ஜியோ ரூ.3999 திட்டம் மட்டுமே 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பேஸ் திட்டமாக வைத்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.2000 ஓடிடி பாஸ் திட்டம் (Jio Rs 2000 OTT Pass Plan): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் சந்தாவுடன் யூடியூப் பிரீமியம் (YouTube Premium) கிடைக்கும். மேலும், பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile) சந்தா கிடைக்கும். இந்த 2 சந்தாக்களை மைஜியோ ஆப் (MyJio App) வழியாக ஆக்டிவ் செய்து கொள்ள முடியும்.

மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஈடிவி வின் (ETV Win), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கேட் (FanCode) மற்றும் டைம்ஸ் பிளே (Times Play) ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

இதுபோக தாரங் பிளஸ் (Tarang Plus) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ டிவி ஆப் வழியாக 1000+ லைவ் டிவி சேனல்களை இந்த ஜியோ ரூ.2000 ஓடிடி பாஸ் திட்டம் கொடுக்கிறது. இதில் சோனி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (Sony Entertainment Network) கீழ் கிடைக்கும் லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படும். சன் டிவி, கேடிவி சேனல்களும் கிடைக்கும்.

இதற்காக சன்டிவி நெட்வொர்க் (Sun TV Network) சந்தா கொடுக்கப்படுகிறது. ஹாலிவுட் மற்றும் இன்போடைன்மெண்ட் விரும்பிகளுக்கு ஏற்றவாறு வார்னர் ப்ரோஸ் (Warner Bros) மற்றும் டிஸ்கவரி (Discovery) சேனல்கள் கொடுக்கப்படுகிறது. இதுபோக ஈடிவி நெட்வொர்க் (ETV Network) கீழ் தெலுங்கு சேனல்களையும் இந்த ஜியோ ரூ.2000 ஓடிடி பாஸ் திட்டம் கொடுக்கிறது.

டேட்டா திட்டமாக இருப்பதால், 365 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டேட்டாவுக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படுகிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகளுடன் ஜியோ ரூ.2000 ஓடிடி பாஸ் திட்டம் கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 2000 OTT Pass Plan With 1000 TV Channels 365 Days Validity 15 OTT Subscription For 365 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X