Home
News

Jio SIM வைத்து இருப்பவர்களுக்கு 365 நாட்களுக்கு 1000+ டிவி சேனல்கள்.. 365 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

கேபிள் டிவி, டிடிஎச் போல லைவ் டிவி சேனல்களை பார்க்க வேண்டும். ஆனால் அதை மொபைலில் பார்க்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் வெறும் ரூ.2000 செலவில் ஒரு ஜியோ திட்டம் இருக்கிறது. லைவ் டிவி சேனல்கள் மட்டும் இல்லாமல் ஓடிடி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த வருடாந்திர ஓடிடி பாஸ் திட்டத்தின் விவரங்கள் இதோ.

ஜியோ ரூ.2000 திட்ட விவரங்கள் (Jio Rs 2000 Plan Details): இந்த ஜியோ ரூ.2000 ஓடிடி பாஸ் திட்டத்தில் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 365 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இதை பெற ஏற்கனவே ஆக்டிவ் ரீசார்ஜ் திட்டம் இருக்க வேண்டும்.

Jio SIM வைத்து இருப்பவர்களுக்கு 365 நாட்களுக்கு 1000+ டிவி சேனல்கள்!

இந்த திட்டத்தின் முக்கிய சலுகையாக யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile) சந்தாக்கள் வழங்கப்படுகின்றன. 2 சந்தாக்களையும் மைஜியோ ஆப் (MyJio App) மூலம் ஆக்டிவேட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட நாட்களுக்கு ஓடிடி கன்டென்ட் பார்க்க விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

ஓடிடி சந்தாக்களை பொறுத்தவரையில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஈடிவி வின் (ETV Win) உள்ளிட்ட பல்வேறு ஆப்களுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. மேலும், கான்ச்சா லங்கா (Kanchha Lannka), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) கிடைக்கிறது.

மேலும், ஃபேன்கேட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play) மற்றும் தாரங் பிளஸ் (Tarang Plus) ஆகிய சேவைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஓடிடி ஆப்களுடன் சேர்த்து லைவ் டிவி சேனல்களையும் பார்க்க முடியும். ஜியோ டிவி ஆப் (JioTV App) வழியாக 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை அணுகலாம். இதில் சோனி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (Sony Entertainment Network) உள்ளது.

ஆகவே, இதில் கிடைக்கும் சேனல்கள் மற்றும் சன் டிவி, கேடிவி உள்ளிட்ட சேனல்களை கொடுக்கும் சன்டிவி நெட்வொர்க் (Sun TV Network) சந்தாவும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர, ஹாலிவுட் கன்டென்ட் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்புபவர்களுக்கு வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி (Discovery) சேனல்களும் கிடைக்கின்றன.

பிராந்திய மொழி கன்டென்ட் பார்ப்பவர்களுக்காக ஈடிவி நெட்வொர்க் (ETV Network) கீழ் வரும் தெலுங்கு சேனல்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. இதனால் பல்வேறு மொழிகளில் சீரிஸ்கள் மற்றும் மூவிக்களை பார்க்க விரும்புபவர்களுக்கு கூடுதல் தேர்வுகள் கிடைக்கின்றன. இருப்பினும், ஜியோ ரூ.2000 ஓடிடி பாஸ் திட்டத்தை தனியாக ரீசார்ஜ் செய்து பயன்படுத்த முடியாது.

ஏற்கனவே 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஆக்டிவ் பேஸ் திட்டம் இருக்க வேண்டும். குறிப்பாக, ஜியோ ரூ.3599 அல்லது ரூ.3999 திட்டத்தை பேஸ் திட்டமாக வைத்திருக்கும் கஸ்டமர்கள் இந்த ஓடிடி பாஸ் திட்டத்தை பெறலாம். எனவே, ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு தற்போதைய திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் சலுகைகளை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

Best Mobiles in India

English summary
Jio Rs 2000 OTT Pass Plan Offers 365GB Data YouTube Premium 1000 Live TV Channels
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X