ஜியோ VS ஏர்டெல்.. ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன சலுகைகள்? எது சிறந்தது? இதோ முழு விவரம்..
ஏர்டெல் நிறுவனம் நேற்று ரூ.200 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கியது. குறிப்பாக இந்த கூடுதல் சலுகை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் ஜியோ நிறுவனமும் ரூ.200 திட்டத்தை வழங்குகிறது. சரி இப்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ரூ.200 திட்டத்தின் நன்மைகள் என்னென்ன மற்றும் எது சிறந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.200 திட்டம் (Airtel Rs 200 Plan) ஆனது தற்போது புதிதாக யூடியூப் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. இந்த யூடியூப் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஏற்கனவே இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ZEE5, ஜியோஹாட்ஸ்டார் சந்தா போன்ற முக்கிய ஓடிடி இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இதன் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மேலும் ஒரு விரிவான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும். அதேபோல் இதில் ஆப்பிள் மியூசிக் சந்தா (Apple Music Subscription) கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி சந்தா திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.
ஜியோவின் ரூ.200 திட்டம் (Jio Rs 200 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.
அதுவும் இந்த சேனல்களை ஜியோ டிவி (Jio TV) ஆப் மூலம் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த லைவ் சேனல்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம். இதுதவிர பல சிறப்பான சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் உள்ளன.
எது சிறந்தது? ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ரூ.200 திட்டம் ஒரே மாதிரியான வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்நிறுவனங்களின் திட்டங்கள் ஓடிடி சந்தாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. ஆனால் ஜியோவின் ரூ.200 திட்டம் 1000 லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் லைவ் டிவி சேனல்களை வழங்கவில்லை. எனவே ஜியோவின் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications
