Home
News

ரூ.200 இருக்கா? இனி 28 நாட்களுக்கு நோ டென்ஷன்.. 13 ஓடிடி சந்தா.. 5 ஜிபி டேட்டா.. Jio பெஸ்ட் ட்ரீட்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மிகக் குறைந்த விலையில் ஒரு சிறந்த ஓடிடி திட்டத்தை வழங்கி வருகிறது. வெறும் ரூ.200 விலையில் கிடைக்கும் இந்த மெகா கன்டென்ட் ஆட்-ஆன் (Mega Content Add-On) திட்டம், சினிமா மற்றும் வெப் சீரிஸ் பிரியர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் முழுமையான விவரங்களை இங்கு விரிவாகக் காண்போம்.

இது ஆட்-ஆன் டேட்டா திட்டமாக இருக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் ஏற்கனவே ப்ரீபெய்ட் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். இதில் டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதில் என்னென்ன ஓடிடி ஆப்கள் கிடைக்கிறது என்பதை முதலில் பார்க்கலாம்.

ரூ.200 இருக்கா? இனி 28 நாட்களுக்கு நோ டென்ஷன்.. 13 ஓடிடி சந்தா!

ரூ.200 விலையில் பிரீமியம் ஓடிடி ஆப்கள்: யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5) போன்ற பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை இந்த திட்டம் கொடுத்துள்ளது. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) கிடைக்கிறது.

சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மாராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கேட் (FanCode) கிடைக்கிறது. ஜியோ டிவி (JioTV) வருகிறது. இதில் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் ஆகிய சந்தாவை மைஜியோ (MyJio) ஆப் வழியாக ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும்.

ஜியோஹாட்ஸ்டாப் சந்தாவை மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். மீதமுள்ள ஓடிடி ஆப்களை ஜியோ டிவி ஆப் வழியாக அணுகலாம். இந்த ஓடிடி ஆப்களுடன் 5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இதே சலுகைகளுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், மற்றொரு பெஸ்ட் திட்டம் இருக்கிறது. இதில் ஆனால், விலை ரூ.300 கூடுதலாக இருக்கும். இதுவும் ஓடிடி திட்டங்களின் கீழ் கிடைக்கிறது. ஆனால், ஆக்டிவ் திட்டம் தேவையில்லை. ஓடிடிகளுடன் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது.

ஜியோ ரூ.500 திட்ட விவரங்கள்: யூடியூப் பிரீமியம், பிரைம் வீடியோ மொபைல், ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, சாவ்பால், ஹோய்சோய், ஃபேன்கோட் மற்றும் ஜியோ டிவி ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. கூடுதலாக ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile) மற்றும் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) கிடைக்கிறது.

இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். கூடுதலாக ஜெமினி ப்ரோ சந்தாவில் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா உள்ளிட்ட அணுகல்கள் 18 மாதங்களுக்கு கிடைக்கும். மற்ற சலுகைகளை பார்க்கையில், 28 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த திட்டங்கள் முழுக்க முழுக்க ஓடிடி பிரியர்களுக்காக கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இது போதும் என்றால், ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 200 Plan With 28 Days Validity 5GB Data 13 OTT Apps Check Best OTT Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X