கேபிள் TV, DTH-க்கு கும்பிடு.. ரூ.200 க்கு 1000+ டிவி சேனல்கள்.. 15 OTT சந்தா.. குக்கூ டிவி, சன் டிவி, கேடிவி!
கேபிள் டிவி, டிடிஎச் சேவையில் கிடைக்கும் டிவி சேனல்களுக்கு நிகரான சேவையை ஜியோ நிறுவனம் கொடுத்து வருகிறது. இதில் சன் டிவி, கேடிவி, குக்கூ டிவி உள்ளிட்ட தமிழ் சேனல்கள் மட்டுமல்லாமல், டிஸ்கவரி, வார்னர் ப்ரோஸ் உள்ளிட்ட பிரீமியம் சேனல்களும் கொடுக்கப்படுகின்றன.
இதுபோக யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. கூடுதலாக சினிபொலிஸ் ஆஃபரும் கிடைக்கிறது. இதில் சினிமா டிக்கெட் புக்கிங்கில் ரூ.150 ஆஃபர் பெற்று கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளும் வெறும் ரூ.200 விலையில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ.200 திட்ட விவரங்கள் (Jio Rs 200 Plan Details): இந்த டேட்டா மற்றும் ஓடிடி திட்டத்துக்கு ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். அதாவது, இதை டேட்டா திட்டமாகவே பயன்படுத்த முடியும். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டா சலுகைக்கு அடுத்து ஓடிடி ஆப்களுக்கு வருவோம். யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) சந்தா கிடைக்கிறது. இந்த பிரீமியம் சந்தாவை மைஜியோ (MyJio) ஆப் வழியாக ஆக்டிவ் செய்ய வேண்டும். மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடியை மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்யலாம்.
இதுபோக சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சோய் (Hoichoi), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play), தாரங் பிளஸ் (Tarang Plus), ஈடிவி வின் (ETVWin) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் ஜியோடிவி (JioTV) ஆப் வழியாக கிடைக்கின்றன.
லைவ் டிவி சேனல்களை பார்க்கையில், ஜியோஸ்டார் (JioStar) சோனி (Sony), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), ஈடிவி நெட்வொர்க் (ETV Network), டிஸ்கவரி (Discovery) மற்றும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros) ஆகியவற்றின் டிவி சேனல்கள் கிடைக்கும். இதில் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம். சன் டிவி, கே டிவி உள்ளிட்ட தமிழ் சேனல்களும் கிடைக்கும்.
ஆனால், இந்த சேனல்களில் ஸ்போர்ட்ஸ் இடம்பெறாது. அதேபோல ஜியோ டிவி ஆப் வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியும். மேலும், குக்கூ டிவி சந்தா (Kuku TV Subscription) இந்த திட்டம் கொடுக்கிறது. இதை கூப்பன் கோட் (Coupon Code) வழியாக பெற்று கொள்ளலாம். மைஜியோ ஆப் வழியாக கூப்பன் கோடை ரீடிம் செய்து கொள்ளலாம்.
இதையடுத்து குக்கூ டிவி ஆப்பை லாகின் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். சினிபொலிஸ் ஆஃபரில் (Cinepolis Offer) கிடைக்கும். இதில் குறைந்தது ரூ.550 மதிப்பில் 2 டிக்கெட்களை புக்கிங் செய்தும்போது, ரூ.150 சலுகை கிடைக்கும். இதை கூப்பன் வழியாக கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதுவும் மைஜியோ ஆப் வழியாக கிடைக்கிறது.
இதில் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறுவதற்கு நாளொன்றுக்கு 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டத்தை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். அதேபோல 28 நாட்கள் வேலிட்டி இருக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த சலுகைகளும் வெறும் ரூ.200 விலைக்கு கிடைப்பதால், ஏர்டெல், வோடபோன் ஐடியாவை பின்னுக்கு தள்ளுகிறது.


Click it and Unblock the Notifications