Home
News

கேபிள் TV, DTH-க்கு பெருசா கும்பிடு.. 1000+ TV சேனல்கள்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. Vi-க்கு வெறும் 250 சேனல்கள்!

கேபிள் டிவி, டிடிஎச் கஸ்டமர்களுக்கு கிடைத்துவந்த லைவ் டிவி சேனல்களை வெறும் ரூ.200 விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம் கொடுக்க தொடங்கியது. இதற்கு போட்டியாக வோடபோன் ஐடியா (Vi) நிறுவனமும் அதே ரூ.200 விலைக்கு லைவ் டிவி சேனல்களை கொடுக்க தொடங்கி இருக்கிறது.

ஜியோ ரூ.200 திட்டத்தில் லைவ் டிவி சேனல்களுடன் ஓடிடி ஆப்களும் கிடைக்கிறது. இது டேட்டா மற்றும் ஓடிடி சந்தா மட்டுமே கொண்ட திட்டமாக இருக்கிறது. ஆகவே, ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். அதேபோல ஜியோ டிவி (JioTV) ஆப் வழியாக லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.

கேபிள் TV, DTH-க்கு பெருசா கும்பிடு.. 1000+ TV சேனல்கள்.. 28 நாட்கள்!

வோடபோன் ஐடியா ரூ.200 திட்டத்திலும் லைவ் டிவி சேனல்களுடன் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இதை பெறுவதற்கும் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். யூப்டிவி (YuppTV) மற்றும் விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) வழியாக 250+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.200 திட்ட விவரங்கள் (Jio Rs 200 Plan Details): 15+ ஓடிடி ஆப்கள் மற்றும் 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. 30 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, ஆக்டிவ் 5ஜி திட்டத்தை வைத்து இருந்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஓடிடி ஆப்களில் யூடியூப் பிரீமியம் (YouTube Premium) கிடைக்கிறது.

பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் உள்ளன. மேலும், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, சாவ்பால், ஹோய்சோய், ஃபேன்கோட், டைம்ஸ்பிளே, தாரங்க் பிளஸ் மற்றும் ஜியோ டிவி கிடைக்கிறது.

மேலும், 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இதில் ஜியோஸ்டார் நெட்வொர்க் சேனல்கள், சோனி நெட்வொர்க் சேனல்கள், சன் நெட்வொர்க் சேனல்கள், வார்னர் ப்ரோஸ் சேனல்கள் மற்றும் டிஸ்கவரி நெட்வொர்க் சேனல்கள் கிடைக்கும். இதுபோக ஈடிவி நெட்வொர்க் சேனல்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

விஐ ரூ.200 திட்ட விவரங்கள் (Vi Rs 200 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 20 ஓடிடி ஆப்கள் மற்றும் 30 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், 250+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். ஓடிடி ஆப்களை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) வருகிறது.

மேலும், ஜீ5 (ZEE5), சோனிவில் (SonyLIV), ஃபேன்கோட் (FanCode) கிடைக்கிறது. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe), மனோரமாமேக்ஸ் (ManoramaMAX), ஃபேன்கோட் (FanCode), ஃபிளேஃபிளிக்ஸ் (Playflix), கிளிக் (Klikk), அட்ராங்கீ (Atrangii), சாவ்பால் (Chaupal), ஓடிடிபிளே லைவ் (OTTplay Live), பாக்கெட் ஃபிலிம்ஸ் (Pocket Films) வருகிறது.

இதுபோக யூப்டிவி, அட்டாடைம்ஸ், கான்ச்சா லங்கா, டைம்ஸ்பிளே மற்றும் நெக்ஸ்ட்ஜிடிவி கிடைக்கிறது. விஐ மூவிஸ் & டிவி ஆப் வழியாக பெரும்பாலான ஓடிடி ஆப்களை அணுகலாம். 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஜியோவில் பிரைம் வீடியோ, யூடியூப் பிரீமியம் உள்ளிட்ட முன்னணி ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

அதேபோல 1000+ டிவி சேனல்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களில் ஜியோ முந்திவிட்டது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வோடபோன் ஐடியா கொடுத்தாலும் ஜியோவை போல நாடு முழுவதும் 5ஜி சேவையை கொடுக்கவில்லை. ஆகவே, இதிலும் ஜியோ முந்துகிறது. எப்படி பார்த்தாலும், ஜியோ ரூ.200 திட்டம் நல்ல தேர்வாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 200 Plan With 1000 Live TV Channels 28 Days Validity Vs Vi Rs 200 Plan 250 Live TV Channels
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X