Home
News

கேபிள் TV, DTH கதை முடிந்தது.. மலிவு விலையில் 1000+ லைவ் சேனல்கள், டேட்டா, 15 OTT சந்தா தரும் ஜியோ..

கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் ஜியோ (jio) நிறுவனம் தொடர்ந்து பல அசத்தலான திட்டங்களைக் கொண்டுவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் சில திட்டங்களில் லைவ் டிவி சேனல், ஓடிடி சந்தா மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது. எனவே இது போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய தான் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் கம்மி விலையில் லைவ் டிவி சேனல், ஓடிடி சந்தா மற்றும் டேட்டா நன்மையை வழங்குகிறது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கேபிள் TV, DTH கதை முடிந்தது.. மலிவு விலையில் 1000+ லைவ் சேனல்கள்..

ஜியோ ரூ.200 திட்டம் (Jio Rs 200 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ், டிஸ்கவரி (Warner Bros. Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.

குறிப்பாக இந்த சேனல்களை ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களில் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த லைவ் சேனல்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அழைப்பு நன்மைகள் மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

கேபிள் TV, DTH கதை முடிந்தது.. மலிவு விலையில் 1000+ லைவ் சேனல்கள்..

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 200 Plan Offers 15 OTT Apps, 1,000 Live TV Channels and 30GB Data: Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X