கேபிள் TV, DTH கதை முடிந்தது.. ரூ.200 போதும்.. 1000+ லைவ் சேனல்கள்.. 15 ஓடிடி ஆப்கள்.. 28 நாட்கள் வேலிடிட்டி!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் நோக்கில் புதிய ரூ.200 ஓடிடி பாஸ் (OTT PASS) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 15 ஓடிடி சந்தா மற்றும் 1000+ லைவ் டிவி சேனல்களை கொடுக்கிறது. இந்த சலுகையை பெறுவதற்கான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
15 ஓடிடி சந்தா மற்றும் 1000+ லைவ் டிவி சேனல்கள்: யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) கிடைக்கிறது.

மேலும், ஃபேன்கோட் (FanCode), சௌபால் (Chaupal), பிளானட் மராத்தி (Planet Marathi), காஞ்சா லங்கா (Kanchha Lannka), தரங் பிளஸ் (Tarang Plus), டைம்ஸ் பிளே (Times Play) ஆகிய ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. ஜியோடிவி (JioTV) மொபைல் ஆப் மூலமாக 1000+ பிரீமியம் லைவ் டிவி (Live TV) சேனல்களை வாடிக்கையாளர்கள் கண்டுகளிக்கலாம்.
இதில் ஜியோஸ்டார் (JioStar), சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி (Warner Bros. Discovery) மற்றும் ஈடிவி (ETV) ஆகிய முன்னணி நெட்வொர்க்குகளின் சேனல்கள் அடங்கும். எனினும், இதில் விளையாட்டு (Sports) கன்டென்ட்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டேட்டா (Data) மற்றும் வேலிடிட்டி: இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி (Validity) கொண்டுள்ளது. இதுவொரு பிரத்யேக டேட்டா திட்டமாகும், இதில் வாய்ஸ் கால்கள் அல்லது எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடையாது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 30 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் 5ஜி கிடைக்கும்.
இந்த டேட்டா தகுதியுள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. இந்த அன்லிமிட்டெட் 5ஜி சலுகையானது, வாடிக்கையாளர் தற்போது பயன்படுத்தும் பேஸ் திட்டத்தின் (Base Plan) வேலிடிட்டி முடியும் வரை மட்டுமே பயன்படுத்த முடியம். ஆகவே, எவ்வளவு நாள் வேலிடிட்டி கிடைக்கிறது என்பதை பொறுத்து சலுகை தொடர்ந்து கொடுக்கப்படும்.
நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள்: இந்த ஓடிடி பாஸ் திட்டத்தில் உள்ள பல்வேறு ஓடிடி கணக்குகளை வாடிக்கையாளர்கள் எவ்வாறு பெற வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கின்றன. மைஜியோ ஆப் (MyJio App) வழியாக யூடியூப் பிரீமியம் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு ஆகிய இரண்டின் சந்தாவை கிளைம் (Claim) செய்ய வேண்டும்.
ஜியோடிவி மொபைல் ஆப் (JioTV Mobile App) வழியாக சோனி லிவ், ஜீ5, சன் நெக்ஸ்ட், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி+, ஹோய்சோய், ஃபான்கோட், சௌபால், பிளானட் மராத்தி, காஞ்சா லங்கா, தரங் பிளஸ் மற்றும் டைம்ஸ் பிளே ஆகிய 12 ஓடிடி தளங்களின் கன்டென்ட்களை பார்க்க முடியும். மேலும், 1000+ லைவ் டிவி சேனல்களையும் இந்த ஆப் வழியேதான் மொபைலில் பார்க்க முடியும்.
ஜியோஹாட்ஸ்டார் ஆப் (JioHotstar App) சந்தாவை பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் நேரடியாக அந்த ஆப்பை லாகின் செய்ய வேண்டும். இந்த திட்டம் ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ள ஜியோ மொபைல் நம்பரை கொடுத்து லாகின் (Login) செய்ய வேண்டும். இந்த திட்டம் முற்றிலும் டேட்டா நன்மைகளை மட்டுமே உள்ளடக்கியது. ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்க்கவும்.


Click it and Unblock the Notifications