ரூ.2,545 ப்ரீபெய்ட் திட்டம்: ஜனவரி 7-ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் ஜியோவின் கூடுதல் சலுகை.!
ஜியோ நிறுவனம் கடந்த மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதன்பின்பு அவ்வப்போது ஒரு சில திட்டங்களில் சலுகைகளும் மற்றும் புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்துவருகிறது. அதேபோல் சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.2345 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகை வழங்கியது.

அதாவது இந்நிறுவனம் ரூ.2345 ப்ரீபெய்ட் திட்டத்தில் 29 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி நன்மையை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.கண்டிப்பாக இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ஜியோ பயனர்கள் ரூ.2354 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் வேலிடிட்டி-க்கு பதிலாக 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ பெறமுடியும் எனபது குறிப்பிடத்தக்கது. இந்த கூடுதல் வேலிடிட்டி நன்மை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறேவேண்டும்.

ஜியோவின் ரூ.2345 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஜியோ சேவைகளுக்கான அணுகல் கிடைக்கும்.

மேலும் ஜியோ நிறுவனத்தின் ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு வழங்கப்பட்ட கூடுதல் வேலிடிட்டி சலுகை ஜனவரி 2-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ஜியோ அறிவித்த தகவலின்படி இந்த சலுகை வரும் ஜனவரி 7-ம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள் இந்த ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு கூடுதல் வேலிடிட்டி நன்மை கிடைக்கும். அதன்பின்பு இந்த சலுகை கிடைக்காது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஜியோவின்சில ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறுநன்மைகளை வழங்குகிறது.

ரூ.601-ப்ரீபெய்ட் திட்டம்
முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ்செய்ய கிடைக்கும்.அதன்படிரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒருவருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறுநன்மைகள்இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்
முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

கூடுதல் டேட்டா சலுகை
முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யகிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும்இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
News Source: 91mobiles.com


Click it and Unblock the Notifications