Home
News

எங்கிட்ட வந்துதான் ஆகனும்.. ரூ.180-க்கு இறக்கிய அம்பானி.. Jio கஸ்டமர்கள் குளிர்ந்து போகும் 5 புதிய திட்டங்கள்!

இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் (Telecom) நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கட்டண உயர்வுக்கு பிறகு கஸ்டமர்களிடையே அதிருப்தியை பெற்று விட்டதாக கூறப்பட்டுவரும் நேரத்தில், ஒட்டுமொத்த ஜியோ கஸ்டமர்களையும் குளிர்விக்கும்படி 5 திட்டங்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் மலிவான விலையில் திட்டங்களை தேடும் ஜியோ யூசர்கள் (Jio Users) கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த மலிவு விலை திட்டங்களின் (Cheapest Plans) முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 4ஜி திட்டங்களிலேயே மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இந்த விலைக்கு திட்டங்கள் இல்லை. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.

எங்கிட்ட வந்துதான் ஆகனும்! ரூ.180-க்கு இறக்கிய அம்பானி.. 5 திட்டங்கள்!

2 ஜிபி டேட்டா சலுகை மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ்களை வேலிடிட்டி நாட்களில் செய்து கொள்ளலாம். ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சந்தாவை பெற்று கொள்ளலாம். மற்ற நிறுவனங்களில் 28 நாட்கள் வேலிடிட்டிக்கு இந்த விலையில் திட்டங்கள் கொடுக்கப்படவில்லை.

ஜியோ ரூ 199 திட்ட விவரங்கள் (Jio Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், 27 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு 1.5 வீதம் பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 18 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். மேலும், வழக்கமாக கிடைக்கும் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் ஆகிய ஆப்களின் சந்தாவை பெறலாம். இதைவிட கூடுதல் வேலிடிட்டி வேண்டுமால், பின்வரும் ப்ரீபெய்ட் திட்டம் கச்சிதமான ஆப்ஷனாக இருக்கும்.

ஜியோ ரூ 209 திட்ட விவரங்கள் (Jio Rs 209 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கிடைப்பதால், 22 ஜிபியை பயன்படுத்தலாம். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்யலாம். ஜியோ ஆப்களின் சலுகையும் கிடைக்கிறது.

ஜியோ ரூ 239 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 33 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. ஜியோ ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ ரூ 249 திட்ட விவரங்கள் (Jio Rs 249 Plan Details): ஜியோ கஸ்டமர்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. 1 ஜிபி டேட்டா வீதம் 28 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தலாம். 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையும் வருகிறது. மேலும் ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கிறது.

மேற்கூறிய ப்ரீபெய்ட் திட்டங்கள் வெறும் ரூ 250 விலைக்குள் கிடைக்கின்றன. இந்த விலையில் ஏர்டெல், வோடபோன் ஐடியாவிடம் திட்டங்கள் கிடையாது. இருப்பினும், சலுகைகளும் மலிவாகவே இருக்கின்றன. பிஎஸ்என்எல்லில் திட்டங்கள் இருந்தாலும், ஜியோ போல பெரும்பாலான நகரங்களில் 4ஜி வேகத்தில் சிக்னலை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, இந்த திட்டங்களே இப்போதைக்கு பெஸ்ட் ஆப்ஷனாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 199 Plan With Unlimited Voice Calls 27GB Data 18 Days Validity Cheapest Plan After Price Hike
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X