Jio SIM-க்கு பெரிய கும்பிடு.. ரூ.200-க்கு இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 27 ஜிபி டேட்டா!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயரும் என்று டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மலிவு விலைக்கு கிடைக்கும் திட்டங்களின் விலை மறைமுகமாக உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, விலையை அதிகரிக்காமல், சலுகைகளை குறைத்தால், ஏற்கனவே கிடைத்த சலுகைகளுக்கு கூடுதல் விலையை கொடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கலாம்.
ஆகவே, இப்போது மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டங்களின் சலுகைகளை பார்த்து கொள்வது நல்லதாகும். இதில் ரூ.200 விலைக்கும் கீழ் கிடைக்கும் திட்டமானது கஸ்டமர்களால் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) உள்ளிட்ட முக்கிய சலுகைகளை கொடுத்து இருக்கிறது.

ஜியோ ரூ.199 திட்ட விவரங்கள் (Jio Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வேல்யூ பிரிவில் மட்டுமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். ரூ.199 விலைக்கு கிடைப்பதால், 18 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், போஸ்ட் டேட்டா, ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகளை கொடுக்கிறது.
ஆகவே, ஜியோ ரூ.199 திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. 1.5 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது.
ஆனால், வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் வேகத்திலான போஸ்ட் டேட்டாவை இந்த ஜியோ ரூ.199 திட்டம் கொடுத்துள்ளது. 18 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் மொத்தமாக 27 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்கலாம். ஜியோ டிவி (JioTV), ஜியோஏஐ கிளவுட் (JioAI Cloud) சலுகைகளையும் இந்த ஜியோ ரூ.199 திட்டம் கொடுத்து இருக்கிறது. இதைவிட மலிவாக ஜியோ ரூ.189 திட்டம் கிடைக்கிறது.
இதில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட 10 நாட்கள் கூடுதலாகும். அது எப்படி விலை கம்மியாக இருக்கும் திட்டத்தில் வேலிடிட்டி அதிகமாக இருக்கிறது என்று சந்தேகம் வரலாம். இந்த திட்டத்தில் வேலிடிட்டி அதிகமாக கிடைத்தாலும், டேட்டா சலுகை குறைவாக கிடைக்கும். அதாவது, தினசரிக்கு டேட்டா கிடைக்காது. மொத்தமாக கொடுக்கப்படும்.
ஜியோ ரூ.189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஒட்டுமொத்த வேலிடிட்டிக்கும் இந்த 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆகவே, கூடுதல் டேட்டாவுக்கு வவுச்சர்களுக்கு செல்லலாம்.
அதேபோல எஸ்எம்எஸ்களும் தினசரிக்கு கிடைக்காது. மொத்தமாகவே 300 மட்டுமே கொடுக்கப்படும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. ஜியோ டிவி (JioTV), ஜியோஏஐ கிளவுட் (JioAI Cloud) சலுகைகளும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications