Home
News

இறங்கி அடித்த அம்பானி.. ரூ.199-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா.. 3 ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் மட்டுமல்லாமல், அதற்கும் கீழும் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) இல்லாமல் 18 நாட்கள் முதல் வேலிடிட்டி தொடங்குகிறது. இப்படி மூன்று திட்டங்களை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, 28 நாட்களுக்கும் கீழ் வேலிடிட்டி கொடுக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 199 திட்ட விவரங்கள் (Jio Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா (Daily Data) மட்டுமல்லாமல், தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) சலுகையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது.

இறங்கி அடித்த அம்பானி.. ரூ.199-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த திட்டத்துக்கு 18 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 27 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி (Jio TV) சலுகை கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 209 திட்ட விவரங்கள் (Jio Rs 209 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் கூடுதல் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆனால், டேட்டாவில் முந்தைய திட்டத்தைவிட குறைவாகவே வருகிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைத்தது, ஆனால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை மட்டுமே வருகிறது.

ஆகவே, 22 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற்று கொள்ள முடிகிறது. இருப்பினும், 1 ஜிபிக்கு பிறகும் முந்தைய திட்டத்தை போலவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் மற்ற சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி சந்தா கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 239 திட்ட விவரங்கள் (Jio Rs 239 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அதே 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 33 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கும்.

அதாவது, 22 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் வருகிறது. ஜியோ டிவி ஆப் சந்தா இதிலும் கிடைக்கிறது. இந்த திட்டங்கள் மட்டுமே 28 நாட்கள் வேலிடிட்டிக்கும் குறைவான நாட்களுடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ஒரு திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், வேலிடிட்டி மிகவும் குறைவாக கிடைக்கிறது. ஆகவே, 14 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி வருகிறது. இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி ஆப் சந்தா கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 199 Plan With Unlimited Voice Calls 18 Days Validity Check Under 28 Days Validity Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X