மறுபடியும் ரூ.199-க்கு ரீசார்ஜ்.. ரூ.1 கேப்புல கெடா வெட்டிய அம்பானி.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு பழையபடி ரூ.199 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. மறுபுறம் ரூ.1 விலை குறைவாக மலிவு விலை அன்லிமிடெட் 5ஜி திட்டம் (Unlimited 5G Plan) கிடைக்கிறது. இந்த ரூ.1 விலையில் என்னென்ன சலுகைகளில் மாற்றங்கள் இருக்கின்றன.
ஜியோ ரூ.199 திட்ட விவரங்கள் (Jio Rs.199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 18 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். வேல்யூ திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைப்பதால், மலிவு விலை திட்டங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. வேல்யூ திட்டங்களில் பெரும்பாலும் லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும்.

இதில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டா தீர்ந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி முழுவதும் 27 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ல் கால்களின் சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.
மேலும், ஜியோ டிவி (JioTV), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆப்களின் அணுகல்கள் கிடைக்கிறது. ஆகவே, ரூ.200 இருந்தால் போதும், தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், இதைவிட மலிவான விலைக்கு கூடுதல் டேட்டாவுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ரூ.1 விலை குறைவாக கிடைக்கிறது.
ஜியோ ரூ.198 திட்ட விவரங்கள் (Jio Rs.198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி முழுவதும் 28 ஜிபி டேட்டா கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட 1 ஜிபி கூடுதலாக இருக்கிறது.
இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் இந்த ஜியோ ரூ.198 திட்டம் கொடுத்துள்ளது. தினசரிக்கு கிடைக்கும் 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட பல மடங்கு டேட்டாவில் முந்துகிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆனால், இப்போது ரூ.200 கீழ் 2 திட்டங்கள் கிடைத்துள்ளது.
ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆப்களும் கிடைக்கின்றன. இந்த 2 திட்டங்களில் முதலாவது திட்டம் 4 நாட்கள் வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, சலுகைகளும் கிடைக்கும்.
எது பெஸ்ட்? டேட்டா சலுகை அதிகமாக வேண்டும், அதே நேரத்தில் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்றால், ஜியோ ரூ.198 திட்டத்துக்கு செல்லலாம். ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் அதிக வேலிடிட்டியுடன் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், ஜியோ ரூ.199 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications