அம்பானியா கொக்கா! Airtel, BSNL, Vodafone-ஆல் கொடுக்க முடியாததை வெறும் ரூ.200 க்கு கொடுக்கும் Jio!
ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) போன்ற டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனித்து நிற்க முக்கிய காரணம்: வாடிக்கையாளர்களின் தேவை என்னவென்று அறிந்து அதை பூர்த்தி செய்வதே ஆகும்!
அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ ஆகிய நான்கு நிறுவனங்களிடம் இருந்தும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.199 திட்டம் தான். ஒரே விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த 4 திட்டங்களில் ஏன் ஜியோவின் ரூ.199 திட்டம் சற்றே தனித்து நிற்கிறது? அது எப்படி என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

முதலில் ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ ஆகிய நான்கு நிறுவனங்களின் ரூ.199 ரீசார்ஜ்களும் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? எத்தனை நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது?என்று பார்த்துவிடலாம். அதன் பின்னர் இந்த நான்கு திட்டங்களின் நன்மைகளையும் ஒப்பிட்டு பார்த்து எது பெஸ்ட் என்கிற முடிவுக்கு வரலாம்!
ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ஏர்டெல்லின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது. இது மொத்தம் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் மொத்தம் 300 இலவச எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது இலவச ஹெலோட்யூன்ஸ், வின்க் மியூசிக்கிற்கான இலவச அணுகல், ரூ.5 மதிப்புள்ள டாக்டைம் போன்றவைகளை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டமானது 23 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களுடன் வருகிறது.
இதன் கீழ் கிடைக்கும் டெய்லி 1.5ஜிபி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோவின் ரூ.199 ஆனது ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்லின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது 2ஜிபி டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. அதாவது இது ஒரு மாதத்திற்கு மொத்தம் 60ஜிபி டேட்டாவை வழங்குகிர்து. டெய்லி டேட்டா லிமிட் முடிந்ததும், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: விஐ-யின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டமானது 18 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிரத்து அன்லிமிடெட் வாய்ஸ் கால், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது விஐ மூவீஸ் & டிவி பேஸிக்-க்கான இலவச அணுகலை வழங்குகிறது.
இந்த 4 திட்டத்தில் எது பெஸ்ட்? சந்தேகத்திற்கு இடமின்றி ஜியோவின் ரூ.199 தான். ஏர்டெல்லின் ரூ.199 ஆனது 3ஜிபி மொத்த டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் ஜியோ டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பிஎஸ்என்எல் மொத்தம் 60ஜிபி டேட்டாவை வழங்கினாலும் கூட அது ஜியோவின் 4ஜி போல வேகமாக இருக்காது. இந்த இடத்திலும் ஜியோ தான் வெல்கிறது.
கடைசியாக உள்ள விஐ ரூ.199 ஆனது வெறும் 18 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். போதாக்குறைக்கு இது டெய்லி 1 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது.ஆக எப்படி பார்த்தாலும் ஜியோ ரூ.199 தான் பெஸ்ட்! ஒருவேளை உங்களுக்கு வேலிடிட்டி தான் முக்கியம்; டேட்டா பற்றி கவலை இல்லை என்றால் நீங்கள் 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் ஏர்டெல் ரூ.199-ஐ திட்டத்தை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








