Home
News

அடிக்குற வெயிலுக்கு ஐஸ் வைத்த அம்பானி.. Jio SIM யூசர்களுக்கு ரூ.200 ரீசார்ஜ் அறிமுகம்.. என்ன வேலிடிட்டி?

ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது பயனர்களுக்காக ரூ.199-க்கு ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை (Jio Rs.199 Recharge Plan) அறிமுகப்படுத்தி உள்ளது.

ஜியோ ரூ.199 திட்டத்தின் டேட்டா நன்மைகள்: ரூ.199 திட்டத்தின் கீழ் டெய்லி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பெரும்பாலான பயனர்கள் - ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவிலேயே திருப்தி அடைவதால், இது பெரும்பாலான மக்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

Jio SIM யூசர்களுக்கு ரூ.200 ரீசார்ஜ் அறிமுகம்.. என்ன வேலிடிட்டி?

ஆனால், இந்த திட்டத்தில் உள்ள ஒரு குறை என்னவென்றால், ரூ.199-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 5ஜி டேட்டா கிடைக்காது. ஏனென்றால் தினசரி 2 ஜிபி அல்லது அதற்கும் அதிகமான டேட்டாவை வழங்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் நுகர்வோருக்கு மட்டுமே ஜியோ நிறுவனம் அதன் அன்லிமிடெட் 5ஜி சேவையை வழங்குகிறது.

ஆகையால் நீங்கள் ஜியோ 5ஜி நெட்வொர்க் நன்றாக கிடைக்கும் பகுதியில் இருந்தாலும் கூட, ரூ.199-ஐ ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு ஜியோ 5ஜி சேவைகள் அணுக கிடைக்காது. இந்த நிலை ஜியோ நிறுவனத்தில் மட்டுமல்ல.; ஏர்டெல் நிறுவனத்திலும் கூட இதே நிலைதான் (2ஜிபி மற்றும் அதற்கு மேலான திட்டங்களில் மட்டுமே 5ஜி) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.199 திட்டத்தின் கீழ் கிடைக்கும் மற்ற நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 திட்டத்தின் கீழ் தினசரி 1.5 ஜிபி டேட்டா மட்டுமின்றி ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகளும் சேர்க்கப்பட்டு உள்ளது.

கூடுதல் பலன்களாக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாக்கள் உள்ளன. இருப்பினும், ஜியோவின் இந்த ரீசார்ஜ் சலுகையில் கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ (Google Gemini AI Pro) சந்தா அல்லது ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் (Jio Hotstar Mobile) திட்டத்திற்கான இலவச அணுகல் ஆகியவைகள் இல்லை.

ஜியோ ரூ.199 திட்டத்தின் வேலிடிட்டி: ரூ.199 திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி வெறும் 18 நாட்கள் மட்டுமே ஆகும். இது அதிக நாட்கள் இல்லை. இது 3 வாரங்களுக்கும் குறைவான காலமே ஆகும். எனவே, இது மலிவாக தெரிந்தாலும், உண்மையில் அப்படி இல்லை. சரி வாருங்கள் - இந்த திட்டத்தின் தினசரி செலவு மற்றும் சராசரி டேட்டாவின் செலவை பார்ப்போம்.

ஜியோவின் ரூ.199 திட்டத்தில், ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.11.05 செலவாகும், அதே சமயம் ஒரு ஜிபி டேட்டாவிற்கு ரூ.7.37 செலவாகிறது. இது மிகவும் விலை உயர்ந்தது அல்ல, ஆனால் மலிவானதும் அல்ல. உண்மையில், தினசரி சராசரியாக, இதைவிட குறைவான விலையில் நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்கள் உள்ளன.

இதைவிட சற்று அதிகமாக செலுத்தி, நீண்ட கால சர்வீஸ் வேலிடிட்டியை பெற விரும்பினால், நீங்கள் ரூ.239 திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். ரூ.239 திட்டத்திலும், ரூ.199 திட்டத்தில் உள்ளதை போலவே வாடிக்கையாளர்களுக்கான நன்மைகள் மற்றும் பலன்கள் அப்படியேதான் இருக்கின்றன.ஆனால் சர்வீஸ் வேலிடிட்டி 18 நாட்களில் இருந்து 22 நாட்களாக அதிகரிக்கிறது. சராசரி தினசரி செலவு ரூ.10.86 ஆகிறது, இது சற்றே குறைவு, ஆனால் பெரிய வித்தியாசம் இல்லை.

நாட்டில் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஜியோ இந்த திட்டங்களை வழங்குகிறது. தினசரி 1.5ஜிபி டேட்டா திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், அவை பெரும்பாலான நுகர்வோரின் தினசரி டேட்டா பயன்பாட்டு முறைக்கு பொருந்துவது மட்டுமல்லாமல், குறைந்த விலையிலும் அதிகபட்ச இந்தியர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றதாகவும் உள்ளன.

Best Mobiles in India

English summary
Jio Rs 199 New Plan With 18 Days Validity Launched For Jio SIM Card Users Is it Worth to Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X