Home
News

Jio பெஸ்ட் ரீசார்ஜ்.. கம்மி பட்ஜெட்ல 72 நாட்கள் வேலிடிட்டி.. OTT.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?

ஏர்டெல் (Airtel) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ. அதேபோல் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா நன்மையை வழங்குவதும் ஜியோ (Jio) தான். எனவே தான் பலர் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மையைத் தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Jio பெஸ்ட் ரீசார்ஜ்.. கம்மி பட்ஜெட்ல 72 நாட்கள் வேலிடிட்டி..

ஜியோ நிறுவனத்தின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்(Jio Rs 198 recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த ஜியோ திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

அதேபோல் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs.198, Rs.629 andRs.749 prepaid plans Validity and benefits: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X