புது வருடம்.. இப்போ ரூ.198-க்கு ரீசார்ஜ்.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. இனிமே Jio யூசர்களுக்கு குஷி!
ஜியோ கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா (2GB Data) கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) அடிமட்ட விலைக்கு வேண்டுமானால், 2025ஆம் ஆண்டில் அவர்களுக்கு ஒரேவொரு திட்டம் மட்டுமே இருக்கிறது. இது 5ஜி டேட்டாவை கொடுக்கும் மலிவு விலை திட்டமாக இருக்கிறது. சொல்லப்போனால், இதைவிட மலிவான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் இல்லை. இது மட்டுமே ஆரம்ப விலை 5ஜி திட்டமாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 198 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 198 Prepaid Plan Details): இந்த திட்டம் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) கொடுக்கிறது. இந்த விலைக்கு போட்டி நிறுவனமான ஏர்டெலிடம் 5ஜி திட்டம் கிடையாது. அதில் ரூ.379 விலையில் மட்டுமே தொடங்குகிறது.

ஆனால், ஜியோவில் ரூ.198 விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப வேலிடிட்டி இருக்கிறது. அதாவது, 14 நாட்கள் மட்டுமே இந்த திட்டத்தில் வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், சலுகைகளை குறையில்லாமல் கொடுத்து இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 14 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டா மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டாவை தினசரிக்கு நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகும் உங்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது. ஆகவே, 14 நாட்களுக்கு எந்தவொரு டேட்டா வவுச்சரும் உங்களுக்கு தேவைப்படாது. இப்போது, மற்ற சலுகைகளுக்கு வரும் டேட்டாவை போல வாய்ஸ் கால்களும் கிடைக்கின்றன.
அதாவது, 14 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை கொடுத்து இருக்கிறது. இந்த டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு அடுத்து 100 எஸ்எம்எஸ் சலுகைகளை தினசரிக்கு கொடுக்கிறது. எப்படி பார்த்தாலும், இந்த திட்டம் நல்ல சலுகை கொண்டதாகவே இருக்கிறது.
கூடுதல் சலுகையாக ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த வேலிடிட்டி போதாது, 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டம இருந்தால், சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ரூ.349 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 349 Prepaid Plan Details): இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டமானது, கிட்டத்தட்ட முந்தைய திட்டத்தை போல சலுகைகளை கொடுக்கிறது. ஆனால், வேலிடிட்டியில் மட்டும் மாற்றம் இருக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டியை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Prepaid Plan) பெற்று கொள்ளலாம். 2 ஜிபி டேட்டா வருகிறது.
அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும், 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்கிறது.
ஆகவே, டேட்டாவுக்கு அடுத்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களையும் பெறலாம். இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களே 2025ஆம் ஆண்டில் கஸ்டமர்களுக்கு ஆரம்ப திட்டங்களாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








