Home
News

திரும்ப ரூ.198-க்கு இறக்கிய அம்பானி.. ஏர்டெல்ல அதே ரூ.379-தான்.. Jio கஸ்டமர்கள் குஷி.. அடிமட்ட ரேட்டுல வருது!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படியான திட்டத்தை களமிறக்கி ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. கட்டண உயர்வுக்கு பிறகு மலிவான விலையில் புதிய திட்டத்தை கஸ்டமர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு நேரம் பார்த்து அடித்துள்ளது ஜியோ நிறுவனம். ஏர்டெல்லில் ரூ.379 மதிப்பில் தொடங்கும் திட்டத்தில் கிடைக்கும் 5ஜி சலுகை இப்போது ஜியோவில் வெறும் ரூ.198 மதிப்பிலான திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை நாடு முழுவதும் வழங்க தொடங்கியது மட்டுமல்லாமல், அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக வழங்குகின்றன. இதனால், 5ஜி வேகத்தில் டேட்டா கிடைக்கும் திட்டங்களையே கஸ்டமர்கள் அதிகம் ரீசார்ஜ் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால், டெலிகாம் (Telecom) கட்டண உயர்வுக்கு பிறகு 5ஜி டேட்டாவுக்கு மினிமம் ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது.

திரும்ப ரூ.198-க்கு இறக்கிய அம்பானி.. ஏர்டெல்ல ரூ.379-தான்.. Jio குஷி!

ஆகவே, ஏர்டெல்லில் ரூ.379 மதிப்பிலான திட்டத்தையும், ஜியோவில் ரூ.349 மதிப்பிலான திட்டத்தையும் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைத்தது. ஆனால், இப்போது ஜியோ வெறும் ரூ.198 மதிப்பில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்து, ஏர்டெல் நிறுவனத்தை மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல்லுக்கு மாறும் கஸ்டமர்களையும் தட்டித்தூக்கியிருக்கிறது. இருப்பினும், சலுகைகளில் மாற்றங்கள் வருகின்றன.

ஏர்டெல் ரூ 379 திட்ட விவரங்கள் (Airtel Rs 379 Plan): ஏர்டெல்லில் கிடைக்கும் மலிவான 5ஜி திட்டம் (Airtel Cheapest 5G Plan) இதுவாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது.

இதுபோக 4ஜி வேகத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதிகபட்சம் 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த ஏர்டெல் திட்டத்துக்கு கிடைக்கிறது. இதுபோக தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாதம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம்.

மேற்கண்ட திட்டத்தில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் ரூ.349 மதிப்பிலான திட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு வரையில் ஜியோ கொடுத்துவந்தது. இதுவே மலிவாக இருந்தாலும், 5ஜி டேட்டா சேவைகளை பயன்படுத்தும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இப்போது அதைவிட மலிவான விலைக்கு புதிய 5ஜி திட்டத்தை களமிறக்கி இருக்கிறது ஜியோ நிறுவனம்.

ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): ஜியோவில் கிடைக்கும் மலிவான 5ஜி திட்டம் (Jio Cheapest 5G Plan) இதுவாகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் 4ஜி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 4ஜி வேகத்தில் 28 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.

ஏர்டெல் திட்டத்தில் கிடைத்ததை போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் இதிலும் கிடைக்கின்றன. அதேபோல தினமும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். விலை மிகவும் மலிவாக இருப்பதால், 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், நல்ல சலுகை கொண்டதாக இருக்கிறது.

ஆகவே, அன்லிமிடெட் டேட்டா மட்டுமல்லாமல் 5ஜி வேகத்தில் திட்டம் வேண்டுமானால், இதைவிட மலிவான விலைக்கு இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் திட்டத்தை வைத்திருக்கவில்லை. இதுபோன்ற திட்டங்கள் மூலம் கஸ்டமர்களை முழு வீச்சில் 5ஜி சேவைக்கு மாற்றும் வேலையை ஜியோ செய்துவருகிறது. சொல்லப்போனால், ஓரிரு ஆண்டுகளில் 5ஜி திட்டங்கள் மட்டுமே கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan With14 Days Validity Unlimited Call 2GB Data Vs Airtel Rs 379 Plan Cheapest 5G Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X