Home
News

இனிமே எப்படி போவீங்க.. மீண்டும் ரூ.200-க்கு வந்த அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 28 ஜிபி டேட்டா.. மலிவான 5ஜி!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு மலிவான விலைக்கு திட்டங்களை கொடுக்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு சாரைசாரையாக கஸ்டமர்கள் மாறி வருகின்றனர். இதனால், திட்டங்களில் கூடுதல் சலுகைகள் மற்றும் புதிய மலிவு விலை திட்டங்களை களமிறக்க முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதிலும் ஜியோ நிறுவனம் முந்திக்கொண்டு அடிமட்ட விலையில் 5ஜி டேட்டாவுடன் புது திட்டத்தை கொடுத்துள்ளது.

இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வெறும் ரூ 198 விலையில் களமிறங்கி இருக்கிறது. இந்த அடிமட்ட விலையில் தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) போன்ற முக்கிய சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையையும் கொடுத்துள்ளது.

இனிமே எப்படி போவீங்க! மீண்டும் ரூ.200-க்கு வந்த அம்பானி.. வாய்ஸ் கால்!

ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): இந்தியாவில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் 5ஜி திட்டம் இதுமட்டுமேயாகும். இந்த திட்டத்தில் 4ஜி டேட்டா மற்றும் 5ஜி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 ஜிபிக்கான 4ஜி டேட்டா கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம்.

மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, டேட்டாவுக்கு எந்தவொரு குறையும் இல்லாமல் இந்த திட்டம் பார்த்து கொள்கிறது. இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். இறுதியாக ஜியோவில் கிடைக்கும் ஜியோகிளவுட் (JioCloud), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அடிமட்ட விலையில் 5ஜி டேட்டா வேண்டுமானால், இந்த திட்டம் மட்டுமே இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக 5ஜி டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், ரூ 349 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த திட்டத்திலும் 4ஜி டேட்டா மற்றும் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இருப்பினும், கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): ஜியோ 5ஜி சேவைக்காக ரீசார்ஜ் செய்யப்படும் திட்டங்களில் இந்த திட்டம் டாப்பாக இருக்கிறது. ஏனென்றால், மாதாந்திர வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. இதுபோக 4ஜி டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் 28 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம்.

இந்த வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 56 ஜிபி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும். முந்தைய திட்டத்தில் வந்ததை போல இதற்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கிறது. ஆகவே, ஜியோகிளவுட், ஜியோசினிமா மற்றும் ஜியோடிவி ஆப்களை பயன்படுத்த முடியும். இந்த சலுகைகளுடன் 5ஜி சேவையை வழங்கும் மலிவான திட்டம் ஏர்டெல் நிறுவனத்தில் கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan With Unlimited Voice Calls 2GB Daily Data 14 Days Validity Check Cheapest 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X