Home
News

Jio-க்கு இதுக்கு மேல வேணுமா.. ரூ.198-க்கு இறக்கியாச்சு.. வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா.. அடிமட்ட விலை திட்டம்!

ஜியோ கஸ்டமர்களிடம் வெறும் ரூ.198 இருந்தால் போதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளை பெற்று கொள்ள முடிகிறது. இதேபோல மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plans) வேலிடிட்டிக்கு ஏற்ப மலிவான விலையில் கிடைக்கின்றன. மூன்றுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொண்ட திட்டங்களாகும். இந்த திட்டங்களின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

டெலிகாம் கஸ்டமர்கள் அதிவேகமக 5ஜி சேவைக்கு மாறி வருகிறார்கள். இப்போது, மார்கெட்டில் 5ஜி திட்டங்கள் மலிவு விலைக்கும் வந்துவிட்டன. ஆனால், ஜியோவில் மட்டுமே அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் தொடங்குகிறது. இந்த விலைக்கு ஏற்ப 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இதேபோல 28 நாட்கள் மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டியும் இருக்கிறது.

Jio-க்கு இதுக்கு மேல வேணுமா.. ரூ.198-க்கு இறக்கியாச்சு.. வாய்ஸ் கால்!

ஜியோ ரூ 198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 Prepaid Plan): ஜியோ கஸ்டமர்களுக்கு ரூ.200-க்கும் கம்மியான விலைக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இந்த விலைக்கு திட்டம் கிடையாது. இதில் 14 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களின் சலுகை கிடைக்கிறது.

மேலும், ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் இருக்கிறது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ் சலுகையும் நாளொன்றுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய சலுகைகளையும் கொடுக்கிறது.

ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid Plan): 14 நாட்கள் வேலிடிட்டி போதாது, 28 நாட்கள் வேலிடிட்டி வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். டேட்டா சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கின்றன.

ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தாவும் கிடைக்கிறது. இதற்கு அடுத்து 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் இருக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்கள் இந்த திட்டத்துக்கு செல்லலாம்.

ஜியோ ரூ 629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். மற்ற சலுகைகள் அனைத்தும் முந்தைய திட்டங்களில் பார்த்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது. ஜியோ ஆப்கள் மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan With Unlimited Voice Calls 14 Days Validity 2GB Data Check Cheapest 5G Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X