Home
News

இனி பேட்டிக்கு ஆளில்ல.. ரூ.200-க்கு இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் 5ஜி.. வாய்ஸ் கால்கள்.. Jio யூசர்கள் குஷி!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதனுடைய ரீசார்ஜ் கட்டணத்தை (Recharge Tariff Hike) உயர்த்திய பிறகு படாதபாடுபட்டது என்றே சொல்ல வேண்டும். ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தினாலும், அதிக கஸ்டமர்களை கொண்ட ஜியோவுக்கே அது சிக்கலாக மாறியது. இதனால், அடிமட்ட விலைக்கு திட்டங்களை களமிறக்குவது, இலவச திட்டங்களை கொடுப்பது என்று பழைய ரூட்டை ஜியோ நிறுவனம் எடுக்க தொடங்கியது. இதில், புதிய திட்டம் மிரளவிடுகிறது.

சொல்லப்போனால், கட்டண உயர்வுக்கு பிறகு அடிமட்ட விலைக்கு திட்டங்களை கொடுக்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு புதிய கஸ்டமர்கள் அதிகரிக்க தொடங்கினர். இதை மறுக்க முடியாது என்றாலும், அதே நேரத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கொடுக்கும் டேட்டா வேகத்தில் பிஎஸ்என்எல் சேவைகள் கிடைக்கவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

இனி பேட்டிக்கு ஆளில்ல.. ரூ.200-க்கு இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் 5ஜி!

இதனாலேயே, ஜியோ நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளில் மும்முரம் காட்டுகிறது. இப்போது, நாம் பார்க்க போகும் ப்ரீபெய்ட் திட்டமும் அப்படித்தான். இந்தியாவிலேயே மலிவு விலை அன்லிமிடெட் 5ஜி திட்டமாக (Cheapest Unlimited 5G Plan) களமிறங்கி இருக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையையும் கொடுத்து இருக்கிறது.

ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): இதுவொரு 5ஜி திட்டமாகும். இந்த விலைக்கு போட்டி நிறுவனமான ஏர்டெல்லிடம் 5ஜி திட்டம் கிடையாது. இந்த 5ஜி டேட்டா போக தினசரி டேட்டா (Daliy Data) சலுகையும் கிடைக்கிறது. அதாவது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இதை 4ஜி வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் ஜியோவின் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் இந்த 4ஜி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டா சேவைகளுக்கு அடுத்தப்படியாக வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை பெறலாம்.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் கால்களை (Unlimited Local Calls) செய்து கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் எஸ்டிடி (Unlimited STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். இதற்கு அடுத்தபடியாக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை ஜியோ கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். மேலும், ஜியோ ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

இந்த சப்ஸ்கிரிப்ஷன் மூலம் ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) ஆப்களை பயன்படுத்த முடியும். ஆனால், பிரீமியம் சலுகைகள் கிடைக்காது. இருப்பினும், லைவ் கிரிக்கெட் மற்றும் குறிப்பிட்ட டிவி ஷோக்களை பார்த்து கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கு அடுத்த 5ஜி திட்டம் எதுவென்றால், ரூ.349 விலையில் கிடைக்கிறது.

மாதம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஆப்ஷனாக இருக்கும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் 4ஜி வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மற்ற சலுகைகள் முந்தை திட்டத்தை போலவே வருகின்றன.

அதாவது, அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஜியோ நிறுவனத்தில் மட்டுமே ரூ.198 விலையில் 5ஜி திட்டம் தொடங்குகிறது. ஏர்டெல்லில் ரூ.300-க்கும் மேலேயே 5ஜி திட்டம் தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan With Unlimited 5G Data Voice Calls 2GB Daily Data Check 5G Plan Under Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X