அட்ராசக்கை.. ரூ.198 விலைக்கே அன்லிமிடெட் Jio டேட்டாவா? எவ்வளவு டேட்டா வேணாலும் எடுத்துக்கோங்க.. ஆனா ஒன்னு..
இந்தியாவில் ரியலைன்ஸ் ஜியோ மட்டுமே ரூ. 200 விலைக்குள் அன்லிமிடெட் 5G டேட்டா அனுபவத்தைப் இலவசமாக வழங்கி அசத்தி வருகிறது. உங்களிடம் ஜியோ சிம் கார்டு இருக்கிறது என்றால், இந்த திட்டத்தை கண்டிப்பாக ஒருமுறையாவது ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்கு திரைப்படங்கள் டவுன்லோட் செய்ய வேண்டுமா? அல்லது உங்களுக்கு பிடித்தமான OTT தளத்தில் பல எபிசோட்களை எந்தவித கவலையுமின்றி அன்லிமிடெட் டேட்டாவுடன், உயர்தரத்தில் பார்த்து ரசிக்க வேண்டுமா? இது அனைத்தும் வெறும் ரூ. 200 செலவிற்குள் நடக்க வேண்டுமா? அப்படியானால், இந்த பதிவை இறுதி வரை படியுங்கள்.
ஜியோ தொடர்ந்து அதன் பயனர்களுக்கு பல தனித்துவமான திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் தனது ஜியோ மக்களுக்கு டேட்டாவை வாரி வழங்கும் ஒரு புதிய திட்டத்தை ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ளது. அது தான் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஜியோ ரூ. 198 திட்டம் (Jio Rs 198 Plan) ஆகும்.

அட்ராசக்கை.. ரூ.198 விலைக்கே அன்லிமிடெட் Jio டேட்டாவா?
ஜூலை, 2024 இல் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்த பிறகு, ஜியோ தனது 5G சலுகைகளுடன் தொடர்புடைய நிபந்தனைகளை மாற்றியமைத்தது. முதலில், ரூ. 239 அல்லது அதற்கு மேற்பட்ட எல்லா ரீசார்ஜ் திட்டங்களும் ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டா அணுகலை வழங்கும் என்று நிறுவனம் அறிவித்திருந்தது. இருப்பினும், திருத்தப்பட்ட கொள்கை இப்போது இந்த நன்மையை தினசரி 2GB டேட்டா வழங்கும் திட்டங்களுக்கு மட்டுமே வழங்குகிறது.
இந்த மாற்றம் சேவை தரத்தையும் செயல்பாட்டு நிலைத்தன்மையையும் சமநிலைப்படுத்த ஜியோவின் மூலோபாய நடவடிக்கையை எடுத்துக்காட்டுகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ. 200 விலை கீழ் அன்லிமிடெட் டேட்டா திட்டங்கள் கிடைத்தால் நன்றாக இருக்குமென்ற வலியுறுத்தலை ஜியோ நிறுவனம் சமீபத்தில் பூர்த்தி செய்துள்ளது. தற்போது ரூ. 198 கட்டணத்துடன் வரும் புதிய திட்டம் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
ஜியோ ரூ. 198 திட்டம் (Jio Rs 198 Plan):
ஜியோ ரூ. 198 திட்டமானது 14 நாட்கள் சேவை செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி 2GB டேட்டா நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. அதன் வாக்குறுதிக்கு ஏற்ப, இந்த திட்டம் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையை இலவசமாக வழங்குகிறது. ஜியோ 5ஜி கவரேஜ் கிடைக்கும் வட்டங்களில் நீங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம்.
ஜியோ வழங்கும் இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை பெற என்ன நிபந்தனைகள் உள்ளது என்று இப்போது தெரிந்துகொள்ளலாம். உங்களிடம் 5ஜி இணக்கத்தில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தல் வேண்டும். நீங்கள் இருக்கும் ஏரியாவில் ஜியோ 5ஜி சேவை இருத்தல் வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியுமென்றால், வெறும் ரூ.198 செலவில் எவ்வளவு டேட்டா நன்மையை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








