Home
News

வேற வழியே இல்ல.. ரூ.200-க்கு கீழ இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. 14 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் கனவிலும் நினைக்க முடியாத விலைக்கு ஜியோ (Jio) நிறுவனம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொண்ட திட்டத்தை மலிவான விலைக்கு கொடுக்கிறது. அடுத்த ரீசார்ஜ் கட்டண உயர்வுக்கு பிறகு இந்த விலைக்கு கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய டெலிகாம் மார்கெட்டில் மலிவான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் வேண்டுமானால், வேறு வழியே இல்லாமல் ஜியோவுக்கு மட்டுமே செல்ல வேண்டி இருக்கும். இந்த நிறுவனத்தில் மட்டுமே ரூ.200 விலைக்கும் மலிவாக அன்லிமிடெட் 5ஜி திட்டம் கிடைக்கிறது. வெறும் ரூ.198 விலைக்கு வாய்ஸ் கால்களுடன் அந்த சலுகையை கொடுக்கிறது.

வேற வழியே இல்ல.. ரூ.200-க்கு கீழ இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ ரூ 198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலைக்கு ஏற்ப வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி கூட எதிர்பார்க்க முடியாது. அதற்கும் பாதியாக 14 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும்.

இது அதிகப்படியான சலுகையாகும். ஏனென்றால், மற்ற நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ.300 விலைக்கே 5ஜி திட்டங்கள் கிடைக்கின்றன. அதிலும் அன்லிமிடெட் டேட்டாவுக்கு கேப் (Cap) இருக்கிறது. ஆனால், ஜியோவில் இப்போதைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு கேப் கிடையாது. இந்த சலுகை மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.

ஆகவே, இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. 14 நாட்களுக்கு மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதற்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கும் தொடர்பு கிடையாது. அதேபோல 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த டேட்டா சலுகைகளுக்கு அடுக்கு முக்கிய சலுகையாக இருக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தினசரிக்கு கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். ஜியோ டிவி (Jio TV) கொடுக்கப்படுகிறது.

ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதில் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், ரூ.349 விலைக்கு கிடைக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இதில் ஏகப்பட்ட கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid Plan): முந்தைய திட்டத்தை போலவே வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் 28 நாட்கள் முழுவதும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக ஜியோ டிஜிட்டல் கோல்டு சலுகை மற்றும் ஜியோ ஹோம் சலுகை கிடைக்கிறது. மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சலுகை வருகிறது. 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கொண்ட ஜியோ ஏஐ கிளவுட் சலுகை கிடைக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரையில் இருக்கும் கஸ்டமர்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan With 2GB Daily Data Unlimited Voice Voice Calls Check Cheapest 5G Plan 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X