Airtel, Vi கதையை ரூ.198-க்கு முடிந்த அம்பானி.. அன்லிமிடெட் 5G டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 14 நாட்கள் வேலிடிட்டி!
ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு (Unlimited 5G Data) மாதாந்திர கேப் (Cap) வைத்தது மட்டுமல்லாமல், குறைந்தபட்ச விலை கொண்ட 5ஜி திட்டங்களை ரூ.300 மேல் வைத்து இருக்கின்றன. ஆனால், ஜியோ (Jio) நிறுவனத்தில் ரூ.200 விலைக்கும் கீழ் கிடைக்கிறது. ரூ.500 விலைக்குள் 7 திட்டங்களை வைத்துள்ளது.
ஜியோ ரூ.198 திட்டம் (Jio Rs 198 Plan): ஆரம்ப விலைக்கு கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி திட்டமாக இருக்கிறது. 14 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா (பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா) மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகையை கொடுக்கிறது.

ஜியோ ரூ.349 திட்டம் (Jio Rs 349 Plan): 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டமாக இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது. ஜியோஹாட்ஸ்டார் சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கும். ஜெமினி ப்ரோ, ஜியோடிவி, கிளவுட் ஸ்டோரேஜ் வருகிறது.
ஜியோ ரூ.399 திட்டம் (Jio Rs 399 Plan): 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா + நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ்கள் போக ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஃபேன்கோட் (FanCode), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜியோடிவி (JioTV), ஜியோஏஐகிளவுட் (JioAICloud), ஜெமினி சந்தா கிடைக்கிறது.
ஜியோ ரூ.445 திட்டம் (Jio Rs 445 Plan): 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் 5ஜி, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட்பிளே, டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, ஈடிவி வின், சாவ்பால், ஹோய்சோய், ஃபேன்கோட் உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது.
ஜியோ ரூ.449 திட்டம் (Jio Rs 449 Plan): இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஜியோஏஐகிளவுட் மற்றும் ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது.
ஜியோ ரூ.450 திட்டம் (Jio Rs 450 Plan): இந்த திட்டத்தில் 36 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கொடுக்கப்படும். ஜியோஏஐகிளவுட் மற்றும் ஜெமினி ப்ரோ சந்தாவையும் இந்த திட்டம் கொடுக்கும்.
ஜியோ ரூ.459 திட்டம் (Jio Rs 459 Plan): இது கேமிங் திட்டமாக உள்ளது. ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஃபேன்கோட் (FanCode), ஸ்னாப்சாட்+ (Snapchat+), ஜியோடிவி (JioTV), ஜியோஏஐகிளவுட் (JioAICloud) கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications