Jio க்கு கும்பிடு.. ரூ.198 க்கு கதையை முடிச்சு விட்ட அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
2025 ஆம் ஆண்டில் பெஸ்ட் 5ஜி திட்டமாக இருக்கும் ஜியோ ரூ.198 திட்டம் மட்டுமே ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. மேலும், 4ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குறைந்தபட்சம் ரூ.300 அல்லது அதற்கும் மேல் விலை கொண்ட திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை எதிர்பார்க்க முடியும். ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களிலும் இந்த விலைக்கே 5ஜி திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஜியோ (Jio) நிறுவனம் மட்டுமே ரூ.200 விலைக்கும் குறைவாக ரூ.198 விலை கொண்ட திட்டத்தில் 5ஜி கொடுத்துள்ளது.

ஜியோ ரூ. 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் மலிவு விலை 5ஜி திட்டமாக இருப்பதால், வேலிடிட்டி அதிகமாக கொடுக்கப்படவில்லை. 14 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், தினசரி டேட்டா (Daily Data), போஸ்ட் டேட்டா (Post Data) போன்ற சலுகைகள் வருகின்றன.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு மொத்தமாக 28 ஜிபி டேட்டா கிடைக்கும். இதை 4ஜி வேகத்தில் ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, மூன்று வித டேட்டாவை இதில் பயன்படுத்தலாம்.
இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கொடுக்கப்படுகிறது. இதை 14 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 100 எஸ்எம்எஸ்களை 14 நாட்கள் முழுவதும் தினசரிக்கு அனுப்பி கொள்ளலாம்.
மேலும், ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை இந்த திட்டத்துக்கு கிடைத்துள்ளது. இந்த திட்டத்துக்கு அடுத்து 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும்படி மற்றொரு 5ஜி திட்டம் இருக்கிறது. மாதம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு இதை பெறலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ. 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். சொல்லப்போனால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஆரம்ப விலை அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்த 2 ஜிபி டேட்டாவை மட்டும் 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்திலும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் உள்ளன. தினமும் 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ ஏஐ கிளவுட் சலுகை உள்ளது. மேலும், ஜியோஹாட்ஸ்டார், ஜியோ கோல்டு, ஜியோ ஹோம் போன்ற சலுகைகளும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








