Home
News

மறுபடியும் ரூ.200-க்கு இறக்கியாச்சு.. அன்லிமிடெட் கால்கள்.. Jio கஸ்டமர்கள் குஷி.. அடிமட்ட ரேட்டுல 5ஜி டேட்டா!

இதுக்குமேல ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக விலைக்குத்தான் கிடைக்கும் போல என்று நினைத்து கொண்டிருந்த ஜியோ (Jio) கஸ்டமர்கள் திக்குமுக்காடும்படி அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daliy Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வந்திருக்கிறது.

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கட்டணங்கள் மாற்றப்பட்ட பிறகு குறைந்தபட்சம் ரூ.199 விலையிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை பெற முடிந்தது. இருப்பினும், அதில் தினசரி டேட்டா மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கவில்லை.

மறுபடியும் ரூ.200-க்கு இறக்கியாச்சு.. அன்லிமிடெட் கால்கள்.. Jio குஷி!

ஆனால், ஜியோ நிறுவனமானது, அதன் கஸ்டமர்கள் வேறு நிறுவனத்துக்கு செல்லாமல் தக்க வைக்க மீண்டும் அடிமட்ட விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் கொண்ட திட்டத்தை களமிறக்கிவிட்டது. சொல்லப்போனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் கூடுதலாக கொடுத்து மற்ற நிறுவனங்களை தூக்கி சாப்பிட்டுள்ளது.

ஜியோ ரூ.198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): டெலிகாம் மார்கெட்டில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G Data) கொண்ட திட்டம் இதுவாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும்.

இந்த 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தில் அதிகப்படியான வேகம் மற்றும் டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும். இப்போது, மற்ற சலுகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கஸ்டமர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்களும் நாளொன்றுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இவ்வளவு சலுகைகளும் போக ஜியோ கஸ்டமர்களுக்கு வரும் பிரத்யேக சலுகைகள் இருக்கின்றன.

அதாவது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோசினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கான வேலிடிட்டியை பார்க்கையில் 14 நாட்கள் கிடைக்கிறது. ஆகவே, 28 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது குறைவான வேலிடிட்டி போல தோன்றலாம். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, மற்ற நிறுவனங்களில் 5ஜி டேட்டாவை பெற ரூ.300-க்கும் மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அதேநேரத்தில் மலிவான விலையில் திட்டம் வேண்டுமானாலும், இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு அதிக விலை இல்லாமல் கிடைக்கும். இதற்கு அடுத்து 5ஜி திட்டம் வேண்டுமானால், ரூ.349 மதிப்பிலான திட்டத்துக்குத்தான் செல்ல வேண்டும்.

இந்த திட்டத்தின் சலுகைகளை பார்க்கையில், 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல தினசரி டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளாம்.

மேலும், முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களும், 100 எஸ்எம்எஸ்களும் தினசரிக்கு கிடைக்கிறது. அதேபோல ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஆப்களின் சலுகையும் இந்த திட்டத்தில் இருக்கிறது. இந்த விலைக்கே ஏர்டெல் நிறுவனத்திலும் 5ஜி திட்டம் தொடங்குகிறது. ஆனால், ரூ.198-க்கு கிடையாது.

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan Offer Unlimited 5G Data With Unlimited Voice Calls 24GB Data For 14 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X